சூப்பர் மார்க்கெட் கூரை இடிந்ததில் 26 பேர் பலி - Sri Lanka Muslim

சூப்பர் மார்க்கெட் கூரை இடிந்ததில் 26 பேர் பலி

Contributors

லாட்வியத் தலைநகர் ரிகாவில் பெரிய ஒரு சூப்பர் மார்க்கெட் கட்டிடத்தின் கூரை இடிந்து விழுந்ததில், குறைந்தது 26 பேர் பலியாகியுள்ளதாக மீட்புச் சேவை அதிகாரிகள் கூறுகின்றனர்.

இடிபாடுகளுக்கிடையில் உயிர்தப்பியவர்களைத் தேடும் பணியில் தீயணைப்புப் படையினரும் , ராணுவத்தினரும் தொடர்ந்து ஈடுபட்டிருக்கிறார்கள்.

இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கச் சென்ற குறைந்தது மூன்று மீட்புப் பணியாளர்கள் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்.

கட்டிட விதிகள் மீறப்பட்டது தொடர்பாக போலிஸ் விசாரணை ஒன்று தொடங்கப்பட்டுள்ளது என்று லாட்வியப் பிரதமர் தெரிவித்திருக்கிறார்.

கட்டிடத்தின் கூரையில் மழைக்காலத் தோட்டம் ஒன்றை உருவாக்க வைக்கப்பட்ட மண்ணின் கனம் தாங்காமல் கூரை இடிந்து விழுந்திருக்கலாம் என்று ஒரு கருத்து நிலவுவதாக பிபிசி செய்தியாளர் ஒருவர் கூறுகிறார்.

2011ல் தொடங்கப்பட்ட இந்த பெருவணிக வளாகம், மெக்சிமா சில்லறை வணிகத் தொடரின் ஒரு பகுதியாகும்.

Web Design by Srilanka Muslims Web Team