செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலைக்கு அத்தியாவசிய வைத்திய உபகரணங்கள் அன்பளிப்பு! - Sri Lanka Muslim

செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலைக்கு அத்தியாவசிய வைத்திய உபகரணங்கள் அன்பளிப்பு!

Contributors

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் எண்ணக்கருவின் பிரகாரம் செயற்ப்படுத்தப்படும் “ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து மூச்சு”திட்டத்திற்கு இணைவாக, ஆரோக்கியமான நாட்டை உருவாக்கும் நோக்கில் ‘ஜன சுவய’ திட்டத்தின் கீழ், “சத்காரய” திட்டத்தின் 36 ஆவது கட்டமாக, இருபத்து நான்கு இலட்சத்து ஐம்பத்து ஏழு ஆயிரம் ரூபா (ரூ.2,457,000) பெறுமதியான அத்தியாவசிய வைத்தியசாலை உபகரணங்கள் இன்று (08) வவுனியா, செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலைக்கு அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டன.
இருபத்து நான்கு இலட்சத்து ஐம்பத்து ஏழு ஆயிரம் ரூபா (ரூ.2,457,000) பெறுமதியான
Dialysis Machine with Portable RO System இயந்திரம் ஒன்றே இவ்வாறு எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களால் அன்பளிப்புச் செய்யப்பட்டது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பிரதம அதிதியாக கலந்துகொண்ட இந்நிகழ்வில், அதிதியாக மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன மற்றும் வைத்தியசாலை நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
கொரோனா பெருந்தொற்று காரணத்தால் பாதிப்புக்குள்ளாகியுள்ள மக்களுக்கு சுகாதார ரீதியாக நிவாரணங்களை வழங்கும் பொருட்டு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் குழு, அமைப்பாளர்கள், ஐக்கிய மக்கள் சக்தியின் வெளிநாட்டுக் கிளைகள், உள்நாட்டு – வெளிநாட்டு ஆதரவாளர்கள் “ஜன சுவய” கருத்திட்டத்தில் இணைந்துகொண்டு, ‘எதிர்க்கட்சியின் மூச்சு” நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றனர்.
இது வரை 35 கட்டங்களில் 1040 இலட்சம் (104,067,000) ரூபா பெறுமதி வாய்ந்த மருத்துவமனை உபகரணங்களை ஐக்கிய மக்கள் சக்தியால் வழங்கப்பட்டுள்ளன.

Web Design by Srilanka Muslims Web Team