.. சென்னை அரசு மருத்துவமனையில் மருத்துவர்களால் நிர்வாகிக்கப்படும் பள்ளிவாசல்! - Sri Lanka Muslim

.. சென்னை அரசு மருத்துவமனையில் மருத்துவர்களால் நிர்வாகிக்கப்படும் பள்ளிவாசல்!

Contributors

சென்னை அரசு மருத்துவமனையில் பள்ளிவாசல்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தொழுகை கடமைகளை நிறைவேற்ற அற்புத பள்ளி ஒன்றை கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுவியுள்ளனர் அங்கு பணிபுரியும் முஸ்லிம் மருத்துவர்கள்!

பெரும்பாலான முஸ்லிம்கள்  இந்த மருத்துவமனையில் அன்றாடம் சிகிச்சை பெற்று வருகின்றனர் இதில் அதிகமானவர்கள் மருத்துவ மனையில் அனுமதித்து தங்கி சிகிச்சை பெறுகின்றனர் இவர்களில் பெரும்பாலனவர்கள் கட்டாய கடமையான 5 வேலை தொழுகையை நிறைவேற்ற முடியாத சூழல் உள்ளது .

ஆனால் இந்த மருத்துவமனை வளாகத்துக்குள்ளேயே ஒரு பள்ளிவாசல் இருப்பது பெரும்பாலானவர்களுக்கு தெரியவில்லை. இந்த பள்ளியில் ஒலிபெருக்கி மூலம் தொழுகைகான அழைப்பு விடுக்கபடுவதில்லை.(காரணம் இருதய அறுவை சிகிச்சை அரங்கிற்கு அருகில் உள்ளதால்.)

இது பற்றி அங்கு பணி புரியும் புற்று நோய் பிரிவு மருத்துவர் மதார்ஷா கூறும் பொழுது….

இந்த பள்ளிவாசலை இங்கு பணிபுரியும் ஒருசில இஸ்லாமிய மருத்துவர்களால் அரசுக்கு கோரிக்கை வைத்து அனுமதி வாங்கி நிர்வகித்து வருகிறோம்.

இதற்குண்டான செலவீனங்களை பணிபுரியும் மருத்துவர்களே வழங்குன்றனர் இதிலிருந்து கிடைக்கும் தொகையிலிருந்து ஒரு இமாம் மற்றும் மோதினார் உள்ளிட்டவர்களுக்கு சம்பளம் வழங்குகிறோம்.

இந்த பள்ளியிலேயே பெண்கள் தொழுகைக்கு தனியிடம் உள்ளது இந்த பள்ளியில் 5 வேலை தொழுகையும் வெள்ளிக்கிழமை ஜும்மாவும் நடைபெறுகிறது என்றார் அவர்.

– See more at: http://www.madawalanews.com/news/world/9618#sthash.ezDScLdg.dpuf

Web Design by Srilanka Muslims Web Team