சென்னை- கொழும்பு நாளாந்த விமான சேவையை நிறுத்துகிறது ஜெட் எயர்வேய்ஸ்! - Sri Lanka Muslim

சென்னை- கொழும்பு நாளாந்த விமான சேவையை நிறுத்துகிறது ஜெட் எயர்வேய்ஸ்!

Contributors

கொழும்பு – சென்னை இடையிலான நாளாந்த விமான சேவையை நிறுத்த இந்தியாவில் ஜெட் எயர்வேய்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

வரும் ஜனவரி 2ம் நாளுடன் கொழும்பு – சென்னை இடையிலான நாளாந்த விமான சேவைகளை நிறுத்திக் கொள்ளவிருப்பதாக, ஜெட் எயர்வேய்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

அதற்குப் பிந்திய நாட்களில் முன்பதிவு செய்து கொண்டவர்கள் மாற்று ஏற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

சென்னை- கொழும்பு இடையில், குறைந்த கட்டண விமான சேவையை ஜெட் எயர்வேய்ஸ் நிறுவனம் நடத்தி வந்தது.

போதிய இலாபமின்மையை காரணம் காட்டி இந்த சேவையை ஜெட் எயர்வேய்ஸ் நிறுத்தியுள்ளது.

இதனால், மருத்துவக் காரணங்களுக்காகவும், வியாபாரத் தேவைகளுக்காகவும், இந்தியா செல்லும் பயணிகள் அதிகளவில் பாதிக்கப்படுவர்.

அதேவேளை, அண்மைக்காலமாக, கொழும்புக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையிலான விமான சேவைகள் குறைக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே மிகின் லங்கா நிறுவனம் திருச்சிக்கும், கொழும்புக்கும் இடையில் நடத்தி வந்த குறைந்த கட்டண விமான சேவையை நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team