செப்டெம்பரில் நாடு முழுமையாக திறக்கப்படும் - ஜனாதிபதி..! - Sri Lanka Muslim

செப்டெம்பரில் நாடு முழுமையாக திறக்கப்படும் – ஜனாதிபதி..!

Contributors

எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தின் பின்னர் நாட்டை மூட நடவடிக்கை மேற்கொள்ளப்படாதென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி நேற்றைய தினம் -26-  இந்த விடயத்தை அமைச்சரவைக்கு அறிவிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, ஜுலை மற்றும் ஒகஸ்ட் மாத இறுதிக்குள் மேலும் 10.5 மில்லியன் தடுப்பூசி இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை 80 வீதம் வரையில் நிறைவடைந்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார நெருக்கடி காரணமாக செப்டெம்பர் மாதத்தில் நாடு முழுமையாக திறக்கப்படும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team