செலுத்துவதற்கு டொலர் இல்லை; 1300 அத்தியாவசியப் பொருள் கொள்கலன்கள் துறைமுகத்தில்..! - Sri Lanka Muslim

செலுத்துவதற்கு டொலர் இல்லை; 1300 அத்தியாவசியப் பொருள் கொள்கலன்கள் துறைமுகத்தில்..!

Contributors

நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள 1300 அத்தியா வசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியிருப்பதாக அத்தியாவசிய உணவுப் பொருள் இறக்கு மதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சுமார் மூன்று மாத காலமாக துறைமுகத்தில் குறித்த கொள்கலன்கள் குவிந்திருப்பதாகவும், இவற்றை விடுவிக்க வங்கிகளிலிருந்து டொலர்கள் வெளியிடப் படாமையே காரணம் எனவும் தெரிவித்துள்ளனர்.

சுமார் 40 முதல் 50 வரையிலான இறக்குமதியாளர்கள் இறக்குமதி செய்த பொருட்களை பல மாத காலமாக சேமித்து வைத்திருப்பதாகவும், அவர்கள் வெளியேற்று வதில் தாமதம் ஏற்படுகின்ற காரணத்தால் தாமதத்திற்கான கட்டணம் செலுத்த வேண்டியுள்ள தாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இன்றைய வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு இது தொடர்பில் தீர்மானம் எடுப்பார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் அந்தச் சங்கத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team