செளதி அரேபியாவில் விலைவாசி உயர்வு: இழப்பீடாக பணம் வழங்குகிறது அரசு - Sri Lanka Muslim

செளதி அரேபியாவில் விலைவாசி உயர்வு: இழப்பீடாக பணம் வழங்குகிறது அரசு

Contributors
author image

BBC

செளதி அரேபியாவில் அமல்படுத்தப்பட்டுள்ள புதிய விற்பனை வரிக்கும், எரிபொருள் விலை உயர்வுக்கும் இழப்பீடாக அரசு அதிகாரிகளுக்கு பணம் வழங்கப்பட உள்ளது.

இதற்காக அடுத்த வருடத்திற்கு 260க்கும் அதிகமான டாலர் பணத்தை மாதம் மாதம் வழங்க செளதி அரசர் சல்மான் உத்தரவிட்டுள்ளார்,

உள்ளூர் பெட்ரோல் விலையை செளதி அரேபியா இரட்டிப்பாக உயர்த்திருந்தது. அத்துடன் உணவு உட்பட பெரும்பாலான பொருட்களுக்கும், சேவைகளுக்கும் 5 சதவீதம் வரியை அறிமுகப்படுத்தியுள்ளது.

தற்போது கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துவரும் நிலையில், எண்ணெய் சார்ந்துள்ளது நிலையைக் குறைக்க செளதி அரசு விரும்புகிறது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸும் 5% விற்பனை வரியை அறிமுகப்படுத்தியுள்ளது

தனியார் சுகாதார மற்றும் கல்வி சேவைகளைப் பயன்படுத்தும் குடிமக்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்றும், முதல் முறையாக வீடு வாங்குபவர்களுக்கு அதற்கான வரியை அரசே செலுத்தும் என்றும் அரச ஆணைக் கூறுகிறது.

எண்ணெய் தவிர தங்களது வருமான ஆதாரங்கள் வளைகுடா நாடுகள் பல்வகைப்படுத்த வேண்டும் எனச் சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் நீண்ட காலமாக கோரி வருகின்றன.

செளதி அரேபியாவில் 90%த்துக்கும் அதிகமான பட்ஜெட் வருவாய்கள் எண்ணெய் தொழிலில் இருந்து வருகின்றது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இது கிட்டதட்ட 80%.

2015-ம் ஆண்டு செலவுகளை குறைப்பதற்காகப் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுபவர்களின் சம்பளங்களைக் குறைத்து செளதி உத்தரவிட்டது.இந்தச் சம்பள குறைப்புகளை செளதி கடந்த ஆண்டு நீக்கியது.

செளதியில் பணியாற்றும் மூன்றில் இரண்டு பங்கினர் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர். 2015-ம் ஆண்டு செளதி அரசின் செலவுகளில் 45 % அரசு ஊழியர்களில் சம்பளத்திற்கும், மற்ற படிகளுக்கும் செலவானது, இது பெரும் பற்றாக்குறைக்கு வழிவகுத்தது.

அரசு கருவூலத்தை நிரப்புவதற்காக செளதி அரேபியாவும், ஐக்கிய அரபு எமிரேட்ஸும் ஏற்கனவே பல நடவடிக்கைகள் எடுத்துள்ளன.

Web Design by Srilanka Muslims Web Team