சொத்து முழுவதையும் தானம் செய்ய சவுதி இளவரசர் தீர்மானம் - Sri Lanka Muslim

சொத்து முழுவதையும் தானம் செய்ய சவுதி இளவரசர் தீர்மானம்

Contributors
author image

World News Editorial Team

சவுதி இளவரசர் அல்வலீத் பின் தலால் தனது 2 இலட்சம் கோடி ரூபா மதிப்புள்ள சொத்துக்கள் அனைத்தையும் தர்மம் செய்வதாக அறிவித்துள்ளார்.

சமூக மேம்பாடு, பெண்கள் முன்னேற்றம், இளைஞர்கள் மேம்பாடு, பேரிடர் நிவாரணம் உள்ளிட்ட நல்ல காரியங்களுக்காக தமது சொத்து பயன்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட காலத்திற்குள் அவரது பணத்தை செலவு செய்ய வேண்டும் என்று நிபந்தனை எதுவும் கிடையாது என அறிவித்துள்ள அவர், மைக்ரோசொப்ட் நிறுவனர் பில் கேட்ஸின் பில் மற்றும் மெலின்டா கேட்ஸ் பவுண்டேஷன் போல் தனது அறக்கட்டளையும் செயல்படும் எனவும் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

இளவரசர் அல்வலீத் உலக பணக்காரர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team