சோமாலியா; சவூதி அரேபியாவிற்கு சொந்தமான கப்பல் கொள்ளையர்களால் கடத்தல் - Sri Lanka Muslim

சோமாலியா; சவூதி அரேபியாவிற்கு சொந்தமான கப்பல் கொள்ளையர்களால் கடத்தல்

Contributors

ஆப்ரிக்கா மற்றும் ஆசிய கண்டத்திற்கு இடையே அமைந்துள்ள செங்கடல் வழியாக சவூதி அரேபியாவிற்கு சொந்தமான எம்.வி. மார்சூகா என்ற சரக்கு கப்பல் சனிக்கிழமையன்று இரவு சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த கப்பல் கடத்தப்பட்டுள்ளது.

அந்த கப்பலிலிருந்து துயரத்திற்கான சிக்னல்கள் மட்டும் கிடைத்தாக கென்ய மாலுமிகள் சங்கம் கூறியுள்ளது.
இதையடுத்து ஆயுதம் ஏந்திய பாதுகாவலர்கள் இல்லாத அந்த கப்பலை 9 பேர் கொண்ட ஆயுதமேந்திய சோமாலியா கடல் கொள்ளையர்கள் கடத்தியுள்ளனர். அதில் 5 பேர் இன்னும் அங்கு இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

சோமாலியாவின் கடற்கரை நோக்கி கொண்டு செல்லப்படும் அந்த கப்பலின் பணியாளர்களாக இந்தியர்கள், எகிப்தியர்கள் மற்றும் சிரியர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கப்பலை மீட்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. கடந்த 2011-ம் ஆண்டு நடத்த கடத்தல் முயற்சியில் இருந்து இந்த கப்பல் தப்பித்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்பகுதிகளில் 2011-ம் ஆண்டு 176 கடத்தல்களும், 2012-ல் 36 கடத்தல்களும் நடந்துள்ளன. அதையடுத்து கடல் ரோந்து தீவிரப்படுத்தப்பட்டன. இந்நிலையில் கடந்த ஆண்டு அது 7-ஆக குறைந்தது என்றும் கூறப்படுகிறது.

Web Design by Srilanka Muslims Web Team