சௌதி அரேபிய அரசு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் நெருக்கமாக இணைந்து செயல்படும் - சௌதி அரசு - Sri Lanka Muslim

சௌதி அரேபிய அரசு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் நெருக்கமாக இணைந்து செயல்படும் – சௌதி அரசு

Contributors
author image

BBC

சௌதி அரேபிய அரசு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் நெருக்கமாக இணைந்து செயல்படும் என்று சௌதி அரேபிய எண்ணெய் வளத்துறை அமைச்சர் , காலித் அல்-ஃபாலி கூறியிருக்கிறார்.

பிபிசியிடம் பேசிய சௌதி அமைச்சர் அல்-ஃபாலி, டிரம்ப் நிர்வாகம் புதைபடிவ எரிபொருட்களுக்குத் தரும் ஆதரவை பாராட்டினார்.

பராக் ஒபாமாவின் “யதார்த்தத்துக்கு மாறான கொள்கைகளைக்“ கைவிட்டு, எண்ணெய், எரிவாயு மற்றும் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி என்ற ஒரு சமாந்திரமான கலவைகளை ஆதரிக்கும் கொள்கை அமெரிக்க மற்றும் சௌதி அரேபிய பொருளாதரங்களை பலப்படுத்தும் என்று அல்-ஃபாலி கூறினார்.

இதன் மூலம் அமெரிக்காவில் மேலும் கூடுதலான சௌதி அரேபிய முதலீட்டுக்கு வழி பிறக்கக்கூடும் என்றும் அவர் கூறினார்.

அமெரிக்கா அதன் அளவில் எண்ணெய் மற்றும் பாறை எரிவாயு சேமிப்புகளை மேலும் உருவாக்கிக்கொள்வதில் சௌதி அரேபியாவுக்கு எந்தப் பிரச்சனையும் எல்லை என்றார் அமைச்சர் அல்-ஃபாலி.

இரு நாடுகளும் ஒரே பொருளாதார இலக்கையே கொண்டிருக்கின்றன என்று கூறிய அமைச்சர், பிராந்திய மற்றும் உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள இரு நாடுகளும் ஒன்றிணைந்து உழைக்கும் என்றார்.

Web Design by Srilanka Muslims Web Team