ஜனா­தி­பதி மஹிந்­தவின் அர­சாங்­கத்­திற்கு எதி­ரான புதிய பயணம் ஆரம்பம். வெகு­வி­ரைவில் ஆட்­சியை தீர்­மா­னிப்போம். கரு ஜெய­சூ­ரிய. - Sri Lanka Muslim

ஜனா­தி­பதி மஹிந்­தவின் அர­சாங்­கத்­திற்கு எதி­ரான புதிய பயணம் ஆரம்பம். வெகு­வி­ரைவில் ஆட்­சியை தீர்­மா­னிப்போம். கரு ஜெய­சூ­ரிய.

Contributors

ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கத்திற்கு எதிரான புதிய பயணத்தினை ஐக்கிய
தேசியக் கட்சி ஆரம்பித்துள்ளது . வெகுவிரைவில் நாட்டின் ஆட்சியினைத் தீர்மானிப்போம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ சபைத் தலைவர் கரு ஜெயசூரிய எம் . பி தெரிவித்தார் .
அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து அரசாங்கத்திற்கு எதிரான மிகப்பெரிய சக்தியாக எம்மை உருவாக்குவோம் எனவும் அவர் கூறினார் .
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ சபையின் எதிர்காலம் அரசியல் நடவடிக்கைகள் மற்றும் செயற்றிட்டங்கள் தொடர்பில் தலைமைத்துவ சபை உறுப்பினர்கள் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை நேற்று சந்தித்து விளக்கிக் கூறினர் .
சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே கரு ஜெயசூரிய மேற்கண்டவாறு தெரிவித்தார் .
இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில் : –
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் இன்று மிக மோசமானதொரு ஆட்சியினை நடாத்தி வருகின்றது . ஒரு புறம் விலையேற்றமும் பொருளாதார சிக்கல்களும் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலையில் அரசாங்கம் கசினோக்காரர்களுக்கு வரிச் சலுகைகளையும் சூதாட்டக்கட்டடங்களையும் கட்டிக் கொடுத்து நாட்டை மேலும் சீரழிக்கப் பார்க்கின்றது .
நாட்டில் இன்று ஒற்றுமையும் , அமைதியும் நிலைகுலைந்துள்ளன . மதப் பிரச்சினைகளையும் இன முரண்பாடுகளையும் அரசாங்கமே தூண்டிவிடுகிறது . இதனை உடனடியாக நிறுத்தி நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் . மக்களின் உரிமைகளையும் ஒற்றுமையினையும் அமைதியினையும் பெற்றுக் கொடுப்பதற்காகவே நாம் போராடி வருகின்றோம் .
இன்று நாம் இந்த சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக போராட்டத்தினை ஆரம்பித்துள்ளோம் . இது நாட்டினை கட்டிக்காத்து ஒற்றுமையினை பலப்படுத்தும் புதியதொரு பயணமாகும் .
தனி ஒருவருக்காக போராடுவதை விட மக்களின் உரிமைகளுக்காகப் போராடுவதே இன்றைய தேவையாகவுள்ளது . கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையுடனான சந்திப்பின் போதும் அவர் இதனையே வலியுறுத்தினார் . எனவே , இன்று மதத் தலைவர்களின் ஒத்துழைப்புடனும் ஆசீர்வாதத்துடனும் எமது பயணத்தினை ஆரம்பித்துள்ளோம் . இன்னும் சில மாதங்களில் மாகாண சபைத் தேர்தலும் ஜனாதிபதித் தேர்தலும் இடம்பெறவுள்ளன .
எனவே அரசாங்கத்தை எதிர்த்து போராடும் அனைத்து எதிர்க்கட்சிகள் மற்றும் அமைப்புகளை ஒன்றிணைத்து பலமானதொரு கட்சியினை உருவாக்குவோம் . இன்று எம்முடன் பலர் ஒன்று கூடிவிட்டனர் . எஞ்சிய சிலரையும் எம்முடன் இணைத்துக் கொள்ள நாம் விரும்புகின்றோம் . ஆகவே வெகு விரைவில் நாட்டின் ஆட்சியினை மாற்றி மக்கள் ஆட்சியினை ஏற்படுத்துவோம் என்றார் .ttn

Web Design by Srilanka Muslims Web Team