ஜனாதிபதிக்கு நல்லாசி வேண்டி வாகன பவனி! - Sri Lanka Muslim

ஜனாதிபதிக்கு நல்லாசி வேண்டி வாகன பவனி!

Contributors

பொதுநலவாய நாடுகள் அமைப்பின் அடுத்த தலைவராகவுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நல்லாசி வேண்டி எதிர்வரும் 21 ஆம் திகதி யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயம் மற்றும் திஸ்ஸமஹாராம விகாரை என்பவற்றிலிருந்து விசேட பூஜை வழிபாடுகள் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அன்றைய தினம் மத வழிபாடுகளின் பின்னர் காலை 9 மணி முதல் நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலிலிருந்து வாகன பவனி ஏ9 வீதியில் கண்டியூடாக 30 ஆம் திகதியன்று கொழும்பை வந்தடையவுள்ளது.

இதேபோன்று, திஸ்ஸ மஹாராம விஹாரையிலிருந்து ஆரம்பமாகும் வாகன பவனியும் 30 ஆம் திகதி கொழும்பை வந்தடையவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

Web Design by Srilanka Muslims Web Team