ஜனாதிபதியின் தீர்மானம் குறித்து எவரும் கேள்வி எழுப்ப முடியாது!– சட்ட மா அதிபர் - Sri Lanka Muslim

ஜனாதிபதியின் தீர்மானம் குறித்து எவரும் கேள்வி எழுப்ப முடியாது!– சட்ட மா அதிபர்

Contributors

ஜனாதிபதியின் தீர்மானம் குறித்து எவரும் கேள்வி எழுப்ப முடியாது என சட்ட மா அதிபர் பாலித பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பிரதம நீதியரசரை ஜனாதிபதியே நியமித்தார். ஜனாதிபதியினால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு சவால் விடுக்க எந்தவொரு நீதிமன்றத்திற்கோ அல்லது நபர்களுக்கோ அதிகாரம் கிடையாது.

ஜனாதிபதியின் தீர்மானங்களுக்கு எதிராக வழக்குத் தொடர முடியாது.

நாட்டின் அரசியல் சாசனத்தின் அடிப்படையில் இந்த விசேட வரப்பிரசாதம் காணப்படுகின்றது.

ஜனாதிபதிக்கு எதிராக இதற்கு முன்னர் உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்ய்யப்பட்டுள்ளன.

பிரதம நீதியரசரை நீதிமன்றில் அழைத்து விசாரணை நடாத்துவதனை நான் கடுமையாக எதிர்க்கின்றேன் என சட்ட மா அதிபர் தெரிவித்துள்ளார்.

பிரதம நீதியரசராக மொஹான் பீரிஸ் நியமிக்கப்பட்ட விதம் பிழையானது எனத் தெரிவித்து மாற்றுக் கொள்கைகளுக்கான கேந்திர நிலையத்தின் தலைவர் பாக்கியசோதி சரவணமுத்துவினால் நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பான விசாரணைகளின் போது சட்ட மா அதிபர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு கால வரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.lw

Web Design by Srilanka Muslims Web Team