ஜனாதிபதியின் பாரியார் சிராந்தி ராஜபக்ஷ உகண்டாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் » Sri Lanka Muslim

ஜனாதிபதியின் பாரியார் சிராந்தி ராஜபக்ஷ உகண்டாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம்

Contributors

ஜனாதிபதியின் பாரியார் சிராந்தி ராஜபக்ஷ உகண்டாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை ஷிராந்தி ராஜபக்ஷ மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

உகண்டாவின் தொழில் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் மேரி கரூரோ ஜனாதிபதியின் பாரியாரை வரவேற்றுள்ளார்.

இலங்கை மற்றும் இந்தியாவிற்கான உகண்டாவின் உயர்ஸ்தானிகர் பவுலா நாபியோக், மற்றும் உகண்டாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் வேலுப்பிள்ளை கணநாதன் ஆகியோரும் ஜனாதிபதியின் பாரியாரை வரவேற்பதற்காக விமான நிலையத்திற்கு சென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

18 பேர் அடங்கிய பிரதிநிதிகள் குழுவொன்று ஜனாதிபதியின் பாரியாருடன் உகண்டா விஜயம் செய்துள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team