ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணங்களில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கலந்து கொள்வதில் கட்டுப்பாடு » Sri Lanka Muslim

ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணங்களில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கலந்து கொள்வதில் கட்டுப்பாடு

Contributors

ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள், ஜனாதிபதி கலந்துகொள்ளும் வெளிநாட்டு பயணங்களின் போது பங்கேற்பது தொடர்பில் கட்டுப்பாடுகள் விதிக்க அந்த கட்சி தீர்மானித்துள்ளது.

 

இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற குழு கூட்டத்தின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.

 

நாடாளுமன்றமோ அல்லது சபாநாயகரோ ஏற்பாடு செய்யும் உத்தியோகபூர்வ நிகழ்வுகள் மற்றும் அழைப்புகள் தவிர்ந்த, ஜனாதிபதி கலந்துகொள்ளும் கலந்துரையாடல்கள் மற்றும் வெளிநாட்டு பயணங்கள் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன.

 

குறிப்பாக மரண சடங்குகள், உத்தியோகபூர்வ சமய நிகழ்வுகளில் கலந்துகொள்ள சந்தர்ப்பம் உள்ளது.
ஏனைய நிகழ்வுகளில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் கலந்துகொள்ள கட்டுப்பாடுகள் விதிப்பதற்கு இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 
அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க கலந்துகொண்ட வெளிநாட்டு பயணங்கள் குறித்து ஏற்பட்ட சர்ச்சைகளை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 
இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியின் மேல் மற்றும் தென்மாகாண சபைத் தேர்தல்களின் பொருட்டு அமைப்பாளர்களுக்கான நியமனக்கடிதங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டன.

 
எதிர்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், ஏற்பாட்டாளர்கள் பதவிகள் ரத்து செய்யப்பட்ட பாலித்த ரங்கே பண்டார மற்றும் அசோக்க அபேசிங்க ஆகியோருக்கும் மீண்டும் நியமனங்கள் வழங்கப்பட்டன.(sfm)

Web Design by Srilanka Muslims Web Team