ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சகல தகுதிகளும் பசிலுக்கு உண்டு - அமைச்சர் லொக்குகே - Sri Lanka Muslim

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சகல தகுதிகளும் பசிலுக்கு உண்டு – அமைச்சர் லொக்குகே

Contributors

2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான அனைத்துத் தகுதிகளும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவுக்கே உள்ளதென போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அலுவலகத்தில் (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, மீண்டுமொரு முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லையென எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூறவில்லை. அதனால் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் குறித்து தற்போதைக்கு பேச வேண்டிய அவசியம் கிடையாது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யார் போட்டியிடப் போகின்றார்கள்? என்பது தொடர்பில் சரியாகக்கூற முடியாது. எனினும், பஸில் ராஜபக்ஷவுக்கு அந்தத் தகுதி உள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிடுவாரெனவும், 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன போட்டியிடுவாரெனவும் எந்தவொரு நபரும் எதிர்பார்க்கவில்லையென்றும் அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team