ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோருடன் மோத முடியுமா?: கொழும்பு மாநகர மேயர் கேள்வி - Sri Lanka Muslim

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோருடன் மோத முடியுமா?: கொழும்பு மாநகர மேயர் கேள்வி

Contributors

அரசாங்கத்துடன் சார்ந்து போவதாக தன் மீது குற்றம் சுமத்தும் நபர்கள், ஐக்கிய தேசியக் கட்சியில் இருப்பதாகவும் அந்த பண்டிதர்கள் 2002ம் ஆண்டு சந்திரிக்கா பண்டாரநாயக்கவுடன் மோதி அன்றைய ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியை வீழ்த்திக் கொண்டதாக கொழும்பு மாநகர மேயர் ஏ.ஜே.எம். முஸ்ஸாமில் தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசும் போதே அவர் இதனை கூறினார்.

நானும் அரசாங்கத்துடன் மோதலுக்கு சென்று நகர சபையையும் வீழ்த்தி கொள்ள வேண்டுமா என நான் இந்த பண்டிதர்களை கேட்கிறேன்.

2002 ஆம் ஆண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அமைச்சரவையில் இருந்த பண்டிதர்கள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவுடன் மோதலுக்கு சென்றனர்.

ஜனாதிபதியின் கைப்பையில் ஒலிப்பதிவு கருவி இருப்பதாக கூறினார்கள். அவர் ஒரு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்பதை இவர்கள் புரிந்து கொள்ளவில்லை. இறுதியில் ஒன்றரை வருடங்களில் ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்தார்.

இறுதியில் ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் கவிழ்ந்து போனது. அந்த பண்டிதர்கள் தான் இன்று என் மீது குற்றம் சுமத்துகின்றனர். எனினும் நான் ஐக்கிய தேசியக் கட்சியை ஒருபோதும் காட்டிக்கொடுக்க மாட்டேன்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோருடன் மோதி பணிகளை செய்ய முடியுமா?.

நான் அரசாங்கத்துடன் மோதலுக்கு போகாமல், அரசாங்கத்தின் வளங்களை பெற்று நகர மக்களின் முன்னேற்றத்திற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறேன். அரசாங்கத்திடம் உதவிகளை பெற்றாலும் நான் ஐக்கிய தேசியக் கட்சியின் மாநகர மேயர் என மேலும் தெரிவித்தார்.(lw)

Web Design by Srilanka Muslims Web Team