ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நாளாந்த செலவு 20 மில்லியன் , சஜித் பிரேமதாச ஐக்கிய தேசியக் கட்சியை இல்லாமல் செய்ய முயற்சி - தினியாவல பாலித தேரர் - Sri Lanka Muslim

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நாளாந்த செலவு 20 மில்லியன் , சஜித் பிரேமதாச ஐக்கிய தேசியக் கட்சியை இல்லாமல் செய்ய முயற்சி – தினியாவல பாலித தேரர்

Contributors

(gtn) , (jm)
ராஜபக்ஷ குடும்பத்தினர் ட்ரில்லியன்களுக்கு அதிபதியாகியுள்ளதாக ஐக்கிய பிக்குகள் முன்னணியின் தலைவர் தினியாவல பாலித தேரர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவியை ஏற்றுக் கொண்டதன் பின்னர் இந்த அவரது குடும்ப உறுப்பினர்கள் ட்ரில்லியன்களுக்கு அதிபதியாகியுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நாளாந்த செலவு 20 மில்லியன் ரூபா என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சஜித் பிரேமதாச, தனியார் தொலைக்காட்சி மற்றுமொரு அச்சு ஊடகம் ஆகியன இணைந்து ஐக்கிய தேசியக் கட்சியை இல்லாமல் செய்ய முயற்சிப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். முன்னாள் பிரதம நீதியரசர்களான சரத் என் சில்வா மற்றும் ஷிரானி பண்டாரநாயக்க ஆகியோர் கட்சித் தாவும் அரசியலுக்கு ஊக்கமளித்தனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கட்சித் தாவும் அரசியல்வாதிகளுக்கு சாதகமான வகையில் இந்த இரண்டு பிரதம நீதியரசர்களும் தீர்ப்புக்களை வழங்கியதாகத் தெரிவித்துள்ளார். போதைப் பொருளைப் பயன்படுத்துவோர் சிறையில் அடைக்கப்படுவதாகவும், பாரியளவில் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோர் சுதந்திரமாக உலவித் திரிவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாய்லாந்தில் மக்கள் ஆட்சியாளர்கள் மீது அதிருப்தி வெளியிட்டதனைத் தொடர்ந்து அந்நாட்டுப் பிரதமர் பதவி விலகியதாகவும் இலங்கையில் அவ்வாறான ஓர் நிலைமை கிடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

Web Design by Srilanka Muslims Web Team