ஜனாபதிக்கு குருநாகல் தல்கஸ்பிடிய முஸ்லிம் மக்கள் கண்ணீருடன் வேண்டுகோள் - Sri Lanka Muslim

ஜனாபதிக்கு குருநாகல் தல்கஸ்பிடிய முஸ்லிம் மக்கள் கண்ணீருடன் வேண்டுகோள்

Contributors

-இ. அம்மார்-

னாதிபதி செயலகத்தின் செயற்திட்டத்தின் கீழ் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் நடவடிக்கையின் பிரகாரம் குருநாகல் மாவட்டத்தில் ரிதிகம பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட தல்கஸ்பிடிய மொரக் வத்த பிரதேசத்திலுள்ள குடியேற்றக் காணியில் 6 1ஃ2 ஏக்கர் காணி நிலப்பரப்பில் வாழும் 42 குடும்பங்களின் காணி உரிமையை கண்டி பத்னி தேவாலயத்திற்கு பெற்றுக் கொடுக்கும் நிகழ்வு 7-12-2013 சனிக்கிழமை தல்கஸ்பிடிய அல் அஷ;ரக் மஹா வித்தியாலயத்தில் காலை 10. 00 மணிக்கு நடைபெற அனைத்து ஒழுங்குகளும் செய்யப்பட்டிருந்தது

இந்நிகழ்வில் காணிசீர்திருத்தக் குழுவின் அதிகாரிகள், கண்டி பத்னி தேவாலயத்தின் நிலமே, ரிதிகம பிரதேச செயலாளர் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கலந்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இக்குடியேற்றக் காணியில் 42 குடும்பங்கள் வாழ்கின்றனர். இதில் 40 முஸ்லிம் குடும்பங்களும் 2 சிங்களக் குடும்பங்களும் வாழ்கின்றனர். காணி சுவீகரிப்புத் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட இந்தக் காணி 1976 ஆம் ஆண்டு ஸ்ரீ. சு. கட்சியின் ஆட்சிக் காலத்தின் போது ஸ்ரீ. சு. கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சமரபாலவினால் இம்மக்களுக்கு குடியிருப்புக்காக கிராம அபிவித்தி திட்டத்தீன் கீழ் வழங்கப்பட்டுள்ளதாக இப்பிரதேச வாசிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

இந்த நிகழ்வு எந்தவிதமான முன்னறிவித்தலோ பரீசிலனையோ இன்றி இக்காணியின் உரிமையைகையளிப்பதையிட்டு இக்கிராம முஸ்லிம் மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி ஆழ்ந்த கவலையுடன் உள்ளனர். இக்காணி விடயமாக ஜனாதிபதி கூடிய கவனம் செலுத்தி இக்காணி குடியிருப்பாளர்களுக்குபெற்றுக் கொடுக்க பிரதேசவாசிகள் கண்ணீருடன் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Web Design by Srilanka Muslims Web Team