ஜாதிக்க ஹெல உறுமயவின் கொழும்பு அமைப்பாளர் கைது » Sri Lanka Muslim

ஜாதிக்க ஹெல உறுமயவின் கொழும்பு அமைப்பாளர் கைது

Contributors

ஜாதிக்க ஹெல உறுமயவின் மத்திய கொழும்பு தொகுதி அமைப்பாளர் சுமித் வெலிவத்த இன்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

கடந்த 8 ஆம் திகதி பிரதமர் காரியாலயத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பலவந்தமாக காரியாலயத்தினுள் நுழைய முற்பட்டதாக அவர் மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டத்தை சிஹள ராவய அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்ததாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் றோஹன தெரிவித்தார்.

காவியுடையணிந்தவர்கள் என்று பௌத்த பிக்குகளை, பிரதமர் குறிப்பிட்டதை அடுத்து அவர் பொதுமன்னிப்பு கோரவேண்டும் என்றும் கோரியே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருந்தது.
காவல்துறையினருடன் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக, ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதமர் காரியாலயத்தில் அத்துமீறி நுழைய முற்பட்டனர்.
குறித்த சம்பவத்தில் சிஹள ராவய இயக்கத்தைச் சேர்ந்த பிக்கு ஒருவருக்கு காயம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.(sfm)

Web Design by Srilanka Muslims Web Team