ஜெஸ்மி எம்.மூஸாவின் தொகுப்பில் முகநூல் முக வரிகள் கவிதை நூல் வெளியீடு » Sri Lanka Muslim

ஜெஸ்மி எம்.மூஸாவின் தொகுப்பில் முகநூல் முக வரிகள் கவிதை நூல் வெளியீடு

Contributors
author image

P.M.M.A.காதர்

மருதமுனையைச் சேர்ந்த எழுத்தாளரும்,ஊடகவியலாளருமான ஆசிரியர் ஜெஸ்மி எம்.மூஸா தொகுத்துள்ள முகநூல் கவிதைகளின் தொகுப்பான முகநூல் முக வரிகள் கவிதை நூல் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை (31-03-2017)மருதமுனை கலாச்சார மத்திய நிலைய மண்டபத்தில் நூலாசிரியர் தலைமையில் நடைபெற்றது.

இதில் முன்னிலை அதிதி ஓய்வு பெற்ற கல்விப்பணிப்பாளர் எம்.எச்.காதர் இப்றாகீம்,எழுத்தாளர் உமாவரதராஜன்,கலாநிதி சத்தார் எம்.பிர்தௌஸ்,ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

இங்கு இலக்கிய அதிதியாகக் கலந்து கொண்ட பேராசிரியர் செ.யோகராசாவிடமிருந்து நூலின் முதல் பிரதியை சறோ நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.எச்.தாஜூதீன் பெற்றுக் கொண்டார்.

எழுகவி ஜலீல் நாட்டார் கவி பாடினார்.நிகழ்வுகளை பிறை எப்.எம்.கட்டுப்பாட்டாளர் பஷீர் அப்துல் கையும்,ஆசிரியர் எம்.எம்.விஜிலி ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள் பெரும் அளவில் எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர்.

m.jpg2 m.jpg2.jpg3 m.jpg2.jpg3.jpg6 m.jpg2.jpg3.jpg44 m.jpg2.jpg3.jpg68

Web Design by The Design Lanka