சவுதிக்கு இராணுவ டாங்கிகளை ஏற்றுமதி செய்யுமா ஜேர்மனி? - Sri Lanka Muslim

சவுதிக்கு இராணுவ டாங்கிகளை ஏற்றுமதி செய்யுமா ஜேர்மனி?

Contributors

ஜேர்மனி தனது 800 இராணுவ டாங்கிகளை சவுதி அரேபியாவிற்கு விற்க போவதை ரத்து செய்ய கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

ஜேர்மனியிடம் இருந்து இராணுவ டாங்கிகளை வாங்குவதற்கு, பல ஆண்டுகளாக சவுதி அரேபியா விருப்பம் தெரிவித்து வந்தது.

 

இதற்காக 18 பில்லியன் யூரோக்கள் நிதியையும் சவுதி அரேபியா ஒதுக்கி வைத்துள்ளது.

 

இந்நிலையில் ஜேர்மனியின் சமூக ஜனநாயக கட்சியின் தலைவர் மற்றும் பொருளாதார அமைச்சரான சிக்மார் காப்ரியேல் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, ரத்து செய்ய கூடும்  என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதைக்குறித்து காப்ரியேல் கூறுகையில், அரசாங்கம் சர்ச்சைக்குரிய ஏற்றுமதியில் பங்கேற்காது என்றும், ஜேர்மனி பல ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதை அவமானமாக நினைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

 

இந்த ஏற்றுமதியில் காப்ரியேல் முக்கிய பங்கு வகிப்பார் என கருதப்படுகிறது.

Web Design by Srilanka Muslims Web Team