ஜோக்கர்களை அமைச்சர்களாக நியமித்துவிட்டு, நாட்டைக கட்டியெழுப்புவது சாத்தியமில்லை - இராஜாங்க அமைச்சர்..! - Sri Lanka Muslim

ஜோக்கர்களை அமைச்சர்களாக நியமித்துவிட்டு, நாட்டைக கட்டியெழுப்புவது சாத்தியமில்லை – இராஜாங்க அமைச்சர்..!

Contributors
author image

Editorial Team

ஜோக்கர்களை அமைச்சர்களாக நியமித்துவிட்டு நாட்டை கட்டியெழுப்புவது சாத்தியமில்லை என இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

மக்கள் மத்தியில் அரசாங்கம் குறித்து குறிப்பிடத்தக்க அளவிற்கு ஏமாற்றம் காணப்படுகின்றது என தெரிவித்துள்ள அவர் ஜோக்கர்களை அமைச்சர்களாக நியமித்துவிட்டு நாட்டைக கட்டியெழுப்புவது சாத்தியமில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இந்த எரிபொருள் விலை அதிகரிப்பு மக்கள் மீது பெருஞ்சுமையை சுமத்தும் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம்,எரிபொருள் மாத்திரமல்ல ஏனைய பொருட்களின் விலைகளும் அளவுக்கதிகமான விதத்தில் அதிகரிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர் பொதுமக்கள் மீது மேலும் சுமைகள் சுமத்தப்படும் இது மிகவும் கடினமான காலம் என்பதை ஏற்றுக்கொள்கின்றோம், அடுத்த வருடம் இன்னும் கடினமானதாக இருக்கலாம் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கேள்வி- நாடு பாரிய டொலர் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள தருணத்தில் சீனாவின் உரக்கப்பலிற்கு பெருமளவு டொலர்களை செலுத்துகின்றனர். இதற்கு எதிராக நீங்கள் ஏன் எதிர்ப்பை வெளிப்படுத்தக் கூடாது?

இது தவறான விடயம் என நாங்கள் தெளிவாக தெரிவிக்கின்றோம், உரக்கப்பலிற்கான கட்டணத்தை அரசாங்கமோ அல்லது மக்களோ செலுத்தவேண்டிய அவசியமில்லை அதற்கான உத்தரவை பிறப்பித்தவர்களே செலுத்த வேண்டும்,ஏனென்றால் உரிய கேள்விப்பத்திர நடைமுறைகள் பின்பற்றப்படாமையினாலேயே இது நிகழ்ந்தது. நியாயபூர்வதன்மை என்பது இல்லை, குறிப்பிட்ட உரத்தின் தன்மையை கூட அவர்கள் ஆராயவில்லை.

இதன் காரணமாக உரத்தைக் கொள்வனவு செய்வதற்கான உத்தரவை பிறப்பித்தவர்களிடமிருந்து பணத்தைப் பெற வேண்டும் என விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team