'டயஸ்போரா தடை நீக்கப்பட்டது போன்று முஸ்லிம் அமைப்புகளின் தடைகளை நீக்க வேண்டும்' - ஹாபீஸ் நசீர்! - Sri Lanka Muslim

‘டயஸ்போரா தடை நீக்கப்பட்டது போன்று முஸ்லிம் அமைப்புகளின் தடைகளை நீக்க வேண்டும்’ – ஹாபீஸ் நசீர்!

Contributors

ஆறு தமிழ் புலம்பெயர் தொண்டர் அமைப்புகளின் தடையை ஜனாதிபதி கடந்த வாரம் நீங்கியிருந்தார். இவர்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கும் பொருளாதாரத்துக்கு உதவுவதற்கும் வரவேற்கின்றோம், அதே போன்று முஸ்லிம் சமூகத்தில் கல்வி, மத ரீதியாகவுள்ள 11 நிறுவனங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. அவற்றையும் அவர்களது நடவடிக்கைகளையும் பரிசீலித்து தடையை நீக்கும்படி ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளோமென அமைச்சர் நசீர் அஹமட் தெரிவித்துள்ளரார்.

நேற்று (17) அமைச்சின் புதிய திட்டங்கள் சட்ட வரைபுகள் பற்றி, நடைபெற்ற ஊடக மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்

குருநாகல் பரகதெனியாவிலுள்ள அரபுக் கல்லாரி 05தசாப்தங்களாக இயங்கி வருகின்றது. இந் நிறுவனம் முஸ்லிம் அநாதை மாணவர்கள் கல்விக்கு, பல்கலைக்கழக மாணவர்கள் கல்வி வசதிகளுக்கு மாதாந்தம் புலமைப் பரிசில், குடிதண்ணீர், வீடு கட்டுதல் போன்ற திட்டங்களை கடந்த 40ஆண்டுகாலமாக செய்து வந்தனர். அந்த நிறுவனத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனம் கடந்த வருடம் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தது. இவ்வாறான நிறுவனங்களுக்கு ஒரு சிலர் தமது ஸக்காத் நிதியை வழங்கினர். அதனையே ஏழை முஸ்லிம் சிறார்கள், மாணவ மாணவிகளுக்கு மாதாந்தம் 1,500ருபாவை கல்விக்காக வழங்கி வந்தனர். கடந்த 02வருடமாக இந்த வறிய மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறான நிறுவனங்களின் தடையையும் நீக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team