டயானாவின் ரகசிய செக்ஸ் டைரி அம்பலம் - Sri Lanka Muslim
Contributors

இங்கிலாந்தின் இளவரசி டயானாவின் ரகசிய செக்ஸ் டைரியில் எழுதப்பட்டிருந்த தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இங்கிலாந்து இளவரசி டயானா தனது காதலர் பரூக் தோதியுடன் பாரீஸில் காரில் சென்றபோது விபத்தில் சிக்கி பலியானார்.

இந்நிலையில் டயானாவின் காதலர்கள் குறித்து அவருக்கு நெருக்கமான தோழியாக இருந்த சிமோன் சிம்மன்ஸ் தெரிவித்துள்ளார்.

தனது மகன்களான இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹாரிக்கு குதிரையேற்ற பயிற்சி அளித்த குதிரையேற்ற வீரர் ஜேம்ஸ் ஹெவிட்டுடன் டயானா உறவு கொண்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ரக்பி விளையாட்டு வீரர் வில் கார்லிங் மீது டயானாவுக்கு ஈர்ப்பு ஏற்பட்டது.

அவர்கள் ஹார்பர் கிளப் ஜிம்மில் தான் முதன்முதலாக சந்தித்தனர்.

தனக்கு ரக்பி விளையாட தனியாக பயிற்சி அளிக்குமாறு டயானா, வில்லிடம் கேட்டு கொண்டதாக சிமோன் கூறினார்.

இஸ்லாமிய கலை நிபுணரான ஆலிவர் ஹோயருடன் டயானாவுக்கு தொடர்பு இருந்தது.

டயானாவுக்கு டாக்டர் ஹஸனத் கானுடனான உறவு உடல் உறவின் அடிப்படையிலானது அல்ல, அவர்களிடையே நெருங்கிய நட்பு இருந்தது என்று தெரிவித்துள்ளார்.

இதுதவிர ராஜ குடும்பத்தாரின் தனிபட்ட விஷயங்கள் பற்றி டைரி ஒன்றில் எழுதி வைத்துள்ளார்.

அதில் இளவரசர் சார்லஸுக்கு படுக்கையில் என்ன பிடிக்கும், எந்தெந்த பெண்களுடன் அவருக்கு தொடர்பு இருந்தது, ராஜ குடும்பத்தின் மூத்த உறுப்பினரும், ஆண் வேலைக்காரரும் படுக்கையில் இருந்தபோது கையும் களவுமாக சிக்கியது உள்ளிட்ட பரபரப்பு தகவல்களை எழுதி வைத்துள்ளார்.

இதன் காரணமாகவும் டயானா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என எழுத்தாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team