டிரம்ப் சவுதிக்கு விஜயம் - Sri Lanka Muslim
Contributors
author image

நன்றி - அனுப்புனர்

-எஸ். ஹமீத்-


பொதுவாக அமெரிக்காவின் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுபவரின் முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் அண்மைய நாடான கனடாவுக்கானதாகவே இருக்கும். அவ்வாறிருக்க, அமெரிக்க அதிபர் ஒருவர் தனது வெளிநாட்டுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை சவூதி அரேபியாவுக்கு மேற்கொள்வது அமெரிக்க வரலாற்றிலேயே இதுதான் முதற் தடவை. அந்த வரலாறைத் தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆரம்பித்து வைத்திருக்கிறார்.

இன்று காலை சவூதித் தலைநகர் ரியாத்திலுள்ள மன்னர் காலித் சர்வதேச விமான நிலையத்தைத் தனது மனைவியான அமெரிக்காவின் முதற் பெண்மணி மெலானியாவுடன் வந்தடைந்திருக்கும் டிரம்புக்குச் சவூதி மன்னர் சல்மான் விமான நிலையத்துக்கே சென்று, அரச பாதுகாவலர்களின் அணிவகுப்புடன் கூடிய செங்கம்பள வரவேற்பளித்துள்ளார்.

ரியாத்தின் வீதிகளில் மன்னர் சல்மானும் ட்ரம்பும் தோன்றும் இலத்திரனியல் பதாதைகள் காணப்படுகின்றன. அமெரிக்க, சவூதி அரேபியாக் கொடிகள் பறக்கின்றன. சவூதித் தொலைக்காட்சிகள் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து ட்ரம்பின் வருகையை ஒளிபரப்புச் செய்து கொண்டிருக்கின்றன. வீதிகளில் கவச வாகனங்கள் சுற்றித் திரிகின்றன.

நாளை ஞாயிற்றுக்கிழமை முஸ்லிம் உலகுடனான உறவுகள் பற்றி அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அரப் அமெரிக்கன் உச்சி மாநாட்டில் உரையாற்றவுள்ளார்.

சவூதி பயணத்தை முடித்துக் கொண்டு ட்ரம்ப் தம்பதியர் இஸ்ரேலுக்கு விஜயம் செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

PHOTO: President Donald Trump and first lady Melania Trump arrive at the Royal Terminal of King Khalid International Airport, Saturday, May 20, 2017, in Riyadh.
 
 
 
PHOTO: President Donald Trump and first lady Melania Trump arrive at the Royal Terminal of King Khalid International Airport, Saturday, May 20, 2017, in Riyadh.
Image result for Trumps saudi arrival
Image result for Trumps saudi arrival
Image result for Trumps saudi arrival
Image result for Trumps saudi arrival

Web Design by Srilanka Muslims Web Team