டில்லியிடம் அவசரமாக நிதி உதவி கோருகிறது கொழும்பு..! - Sri Lanka Muslim

டில்லியிடம் அவசரமாக நிதி உதவி கோருகிறது கொழும்பு..!

Contributors
author image

Editorial Team

இலங்கையின் கோரிக்கைக்கு உடனடியாகப் பதிலளிப்பதற்கு இந்தியா தயாராக இல்லாதமை அண்டைய தீவு நாடால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்களைப்படைந்து விட்டதைக் காட்டுகிறதா? இந்தியாவிடம் பணம் இருக்கிறது, ஆனால் குறிப்பாக அதிகாரத்திலுள்ள ராஜபக்சா க்கள் சீனாவுக்கு சாதகமான தன்மையை திரும்பத்திரும்ப காண்பித்துள்ள நிலையில் இலங்கைக்கு உதவி செய்வதற்கான விருப்பம் உள்ளதா?
கேர்ணல் ஆர். ஹரிஹரன்
இலங்கை பாரா ளுமன்றத்தில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச சமர்பித்திருந்த வருடாந்த வரவுசெலவுத் திட்டதின் மீதான விவாதம் நடந்துகொண்டிருந்தபோதும், நாட்டின் வரவிருக்கும் பொருளாதாரவீழ்ச்சியை தடுக்க இந்தியாவின் அவசர உதவியைப் பெறுவதற்காக, இரண்டு நாள் பயணமாக, டிசம்பர் 1ஆம் திகதி , புதுடில்லிக்குபயணம் மேற்கொண்டிருந்தார்.  இதற்கு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கிண்டலான கருத்தை முன்வைத்துள்ளார். பாராளுமன்றத்தில் அவர் பேசுகையில், “நாம் கடந்தகாலத்தில் சமாந்தரமாக நிதியமைச்சர்களாகவும் பணியாற்றியுள்ள ஜனாதிபதிகளைக் கொண்டிருந்தோம், ஆனால் அவர்கள் எப்போதும் வரவுசெலவுத்திட்ட விவாதங்களில் கலந்துகொண்டனர். முக்கியமான பொது நிதி விவகாரங்கள் விவாதிக்கப்படும் போது நிதி அமைச்சர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதை நாங்கள் பார்த்ததில்லை. எமது நிதியமைச்சர் இந்தியா சென்று திரும்பி வந்தார். அவர் இந்தியாவிலிருந்தும் இரப்பதற்கு சென்றாரா என்பது எங்களுக்குத் தெரியாது.”
ஆனால் இலங்கையின் நிகர அந்நிய செலாவணி கையிருப்பு இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு மாத இறக்குமதிக்கு பணம் செலுத்துவதற்கு மட்டுமே போதுமானதாக 1.2 பில்லியன் டொலர் அளவுக்கு சரிந்துள்ளதால், பசில் ராஜபக்சவுக்கு இந்தியாவின் அவசர உதவியை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை. எண்ணெய் முதல் அரிசி, தானியங்கள் மற்றும் மருந்துகள் வரை அத்தியாவசியப் பொருட்களுக்கு முன்னெப்போதும் இல்லாத அளவில் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்களைக் கொந்தளிக்கச் செய்தது. உணவு தானியங்கள், மருந்துகள் மற்றும் பெற்றோலிய வளங்களின் முக்கியமான தேவைகளை மட்டும் பூர்த்தி செய்யாமல், கடனை அடைப்பதிலும் உதவ வேண்டும் என்று இலங்கையின் கோரிக்கைகளை இந்தியா கடந்த காலத்தில் நிறைவேற்றியதால், இலங்கை அமைச்சர் பல எதிர்பார்ப்புகளுடன் வந்திருக்கலாம்.
இலங்கையின் சில நடவடிக்கைகள் குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தும் சீனாவுக்கு மாறாக, பிரதமர் நரேந்திர மோடியின் கீழ் இந்தியா தனது சந்தேகங்களை பகிரங்கமாக வெளிப்படுத்தியதில்லை, ராஜபக்சா க்கள் இந்தியாவின்நலன்களை பாதிக்கும் முக்கியமான விவகாரங்களில் அதன் உணர்வுகளை புறக்கணித்தபோதும் கூட, இந்தியா அதைத் தெரிவிப்பதற்குத்இராஜதந்திரவழிளை த் தேர்ந்தெடுத்தது.
விஜயம் மேற்கொண்ட இலங்கை அமைச்சருடன் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் ஆகியோர் இரண்டு சுற்று பேச்சுக்களை நடத்தினார். அத்துடன் அவர் பெற்றோ லியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் பூரி மற்றும் தேசியபாதுகாப்பு அஜித் தோவல் ஆகியோரையும் சந்தித்தார். ஆனால், அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பார் என்று இலங்கை ஊடகங்கள் தெரிவித்திருந்த போதிலும், அப்படியொரு சந்திப்பு நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச மற்றும் உள்நாட்டு அரசியல் நிகழ்ச்சிநிரல் நிறைந்த இந்தியப் பிரதமரின் அட்டவணையில்சந்திப்புக்கு இடமளிக்க முடியவில்லை என்பது ஒருசாதகமான பார்வையாக இருக்கலாம்.
இந்த விஜயம்தொடர்பான இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தின் செய்திக்குறிப்பின்படி, இரு தரப்பும் “குறுகிய மற்றும் நடுத்தர கால ஒத்துழைப்புக்கான நான்குமுக்கிய விடயங்கள் ” பற்றி கலந்துரையாடியுள்ளன. எவ்வாறாயினும், உண்மையில் “ஒத்துழைப்பின் நான்கு முக்கிய விடயங்களும் “ இலங்கை அரசுக்கு “புத்துயிர் பெறுவதற்கான நான்கு நீரோடைகள்” ஆகும். நான்கு பிரதானவிடயங்களும் இந்தியாவின் நிதி உதவி மற்றும் முதலீட்டிற்கான நான்கு தொகுப்புகளின் கலவையாகும். உணவு மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு ‘பொதி ‘ ஒரு நீடிக்கப்பட்ட கடனில் அவசர விநியோகம் , சிலசமயம் உணவு தொடர்பான கலவரங்கள் மற்றும் கோவிட்-19 தொற்றுநோய்களின் வீழ்ச்சியைத் தடுக்க முன்னுரிமை அளிக்கிறது. நாட்டின் பெற்றோ லியப்கையிருப்புகள் வறண்டு வருவதால், இந்தியாவிலிருந்து எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான எரிசக்தி பாதுகாப்புப் பொதி, நீடிக்கப்பட்ட கடன் வரிசையில் அடுத்ததாக வருகிறது. ஒருவேளை, இந்தியாவைக் கவர்ந்திழுக்கும் வகையில்,நீ ண்ட காலமாக மறந்துவிட்ட திருகோணமலை எண்ணெய்க்குதத்தை நவீனமயமாக்குவதற்கான இந்தியஉதவி தொடர்பாக தூசி தட்டி குறிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பல்வேறு துறைகளில் இந்திய முதலீடுகளைஇலகு வாக்குவது க்குவது கடைசியாக உள்ளது.
“இந்த நோக்கங்களை நிறைவேற்றுவதற்கான வழிமுறைகள் பரஸ்பரம் ஒப்புக்கொள்ளப்பட்ட காலக்கெடுவுக்குள் முன்கூட்டியே நிறைவு செய்யப்படும் என்று இணங்கிக்கொள்ள ப் பட்டது. அமைச்சர் ராஜபக்ச மற்றும் அமைச்சர்கள் சீதாராமன் மற்றும் ஜெய்சங்கர் ஆகியோர், மேற்கூறிய முயற்சியை ஒருங்கிணைக்கும் வகையில், நேரடியான தகவல்தொடர்பு வழிகளைத் திறக்கவும், நேரிடையாகவும், வழக்கமாகவும் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளவும்இணங்கிக் கொண்டனர்”.என்று இலங்கைஉயர் ஸ்தானிகராலய அறிக்கை மேலும் கூறியது
பெறுமதி வாய்ந்த இத்தகையநடவடிக்கைகளுடன் , பசிலின் ‘ புது டி ல்லி பயணம் ’, “முன்னே ற்ற கரமாக நடந்து கொண்டிருக்கிறது” என்று விவரிக்கப்படலாம். இராணுவ சொற்பதங்கள் நன்குபரீட்சயமான நீண்டகால அனுபவஸ்தரான ஜனாதிபதி ராஜபக்சவுக்கு பணி நிலை எஸ். என் .ஏ . எவ் . யூ. என விவரிக்கப்படும் – “நிலைமை சாதாரணமானது, அனைத்தும் தவறானது”. இந்தியாவிலிருந்து திரும்பியதும் பாராளு மன்றத்தில் நிதியமைச்சரின் அடக்கமான உரையில் இருந்து இது தெளிவாகிறது.
சாதாரண சூழ்நிலையில், ராஜபக்ச அரசாங்கம் கடந்த காலத்தைப் போலவே சீனாவின் உதவியை நாடியிருக்கும்; அது ஏற்கனவே சீனாவுக்கு சுமார் 5 பில்லியன் டொ லர் கடன்பட்டுள்ளது. ஆனால், உர மாதிரிகள் தீங்கு விளைவிக்கும் நோய்க்கிருமிகளால் மாசுபட்டதாகக் கண்டறியப்பட்டதை ய டுத்து,சீனாவுடனான 48 மில்லியன் டொ லர் மதிப்பிலான இரசாயன உர இறக்குமதி ஒப்பந்தத்தை இலங்கை கைவிட்ட பிறகு,சீனா செல்லக்கூடாத பகுதியாக மாறிவிட்டது. இப்போது சர்ச்சைக்குரிய ஒப்பந்தம் சிங்கப்பூர் மற்றும் கொழும்பில் நடுவர் மன்ற நடவடிக்கைகளை எதிர்கொள்கிறது. மேலும் காயத்திற்கு ஊறு விளைவிப்பதாக இலங்கை திரவ நைட்ரஜன் உரத்தை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்து பற்றாக்குறையைப் போக்கியது. சினோ சோலார் ஹைப்ரிட் டெக்னாலஜி நிறுவனத்தின் மூலம் இலங்கையின் வடக்குத் தீவுகளில் கலப்பு சக்தி முறைமைகளை உருவாக்குவது குறித்து இலங்கை முடிவை மாற்றி இருப்பதாகத் தோன்றியதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேலும் மோசமடைந்துள்ளதாகத் தெரிகிறது. கொழும்பில் உள்ள சீனத் தூதரகம், மூன்றாம் தரப்பினரின் தலையீட்டால், இந்தியாவைக் குறிப்பிடும் வகையிலானதென்பது அனுமானிக்கக்கூடியதாகும்., திட்டங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ட்வீட் செய்திருந்தது .இ துஇந்தியாவைக் குறிப்பிடும் வகையிலானதென்பது அனுமானிக்கக்கூடியதாகும் இந்தியா தனது கடற்கரையிலிருந்து 43 கிமீ தொலைவில் உள்ள இடங்களில் சீனாவின் இந்த திட்டத்தில் ஈடுபடுவது குறித்து கவலை தெரிவித்தது.
நாணய பரி மாற்றம் மற்றும் பெற் றோ லியம் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் கடந்த காலத்தில் இடம்பெற்றிருந்ததை போல இந்தியாவால் இலங்கையை மீட்க முடியும். தொற்றுநோய்க்கு மத்தியில் கூட, இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு கடந்த ஆண்டு 478 பில்லியன் டொ லரிலிருந்து சில ஸ்மார்ட் நிதிமுகாமைத்துவத்தின் மூலம்இந்த ஆண்டு 577 பில்லியன் டொ லராக உயர்ந்துள்ளது,
எனவே, இந்தியாவிடம் பணம் உள்ளது, ஆனால் இலங்கைக்கு உதவி செய்ய விருப்பம் உள்ளதா?
இலங்கையின் கோரிக்கைக்கு உடனடியாகப் பதிலளிப்பதில் இந்தியா தயாராக இல்லாதமை அண்டை நாடால் ஏற்றுக்கொள்ளப்படுவது தொடர்பாக இந்தியா சோர்வடைந்திருப்பதை இருப்பதைக் காட்டுகிறதா?
கடந்த காலத்தைப்பார்க்கும்போது இவை இந்திய மனதில் ஏற்பட க் கூடிய நியாயமான கேள்விகள். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஏப்ரல் 2017 இல் புதுடில்லிக்கு விஜயம் செய்த போது இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். எரிசக்தி, உள்கட்டமைப்பு இணைப்பு மற்றும் துறைமுக அபிவிருத்தி கட்டமைப்புகளில் இந்திய உதவியுடன் கொழும்பிலும் திருகோணமலை பகுதிகளி லும் வீதிப் பிரிவுகள் பெரும்பாலும் வடக்கு மாகாணத்தில் முதலீட்டுடன் காலவரையறையறையுடன் திட்டங்களை மேம்படுத்துவதில் அதன் கவனம்பிரதானமாக தாக இருந்தது. இந்தத் திட்டங்களில் 500 மெகாவாட் மின் உற்பத்தி நிலையம், கெரவல பிட்டியவில் எல்என்ஜி முனையம் /மிதக்கும் சேமிப்பு மீள் -எரிவாயு அலகு, சம்பூரில் 50 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி நிலையம், திருகோணமலையில் எண்ணெய் தாங்கி, துறைமுகம், பெற் றோ லிய சுத்திகரிப்பு நிலையம் ஆகியவை அடங்கும். மேலும் திருகோணமலையில் உள்ள ஏனைய தொழில்கள், மற்றும் மன்னார்-யாழ்ப்பாணம், மன்னார்-திருகோணமலை , தம்புள்ளை-திருகோணமலை அதிவேக நெடுஞ்சாலைகளை இந்திய முதலீட்டுடன் அபிவிருத்தி செய்தல், என்பனவும் உள்ளடங்குகின்றன .
இந்த திட்டங்களில் பெரும்பாலானவை பரிசீலனைக்கு எடுக்கப்பட்டபோது இந்தியாவினுடையவை புறக்கணிக்கப்பட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் உள்ள திட்டங்கள், இப்போது மற்றவர்களுக்கு துண்டு துண்டாக வழங்கப்பட்டுள்ளன. இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையின் மூலம், வடக்கு மற்றும் கிழக்கில் தொழில்துறை மற்றும் உள்கட்டமைப்பு இணைப்புகளின் அபிவிருத்திக்கு கணிசமான பங்களிப்பை வழங்குவதற்கு ஜப்பானுடன் இணைந்து மேற்கொள்வது தொடர்பாக இந்தியா எதிர்பார்த்தது , இது இலங்கையின் ஏனைய பகுதிகளுடன்பிராந்தியங்களை ஒருங்கிணைப்பதை விரைவுபடுத்தும்.
கோவிட்-19 தொற்றுநோய், நாட்டின் முக்கிய அந்நியச் செலாவணி ஈட்டும் சுற்றுலாத் துறையை கிட்டத்தட்ட அழித்துவிட்டது. காட்சியில் ஓமிக்ரான்உருத்திரிபு மாறுபாட்டுடன் அதன் மறுமலர்ச்சிக்கான வாய்ப்புகள் இருண்டதாகத் தெரிகிறது. வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் அனுப்பும் பணம் குறைந்துள்ளது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச இரண்டு வருடங்களுக்கு முன்னர் பதவியேற்ற போது, ஆட்சியில் இருந்த அரசாங்கங்களின் தவறான நிர்வாகத்தால் ஏற்கனவே சிதைக்கப்பட்ட பொருளாதாரத்தை அவர் பெற்றிருந்தார் . இயற்கை விவசாயம் மற்றும் தூய எரிசக்தி மூலம் உணவு தன்னிறைவு பற்றிய அவரது உயர்ந்த யோசனைகளை நடைமுறைப்படுத்துவது, சாதாரண காலத்திற்கு ஏற்றதாகும்., விவசாய உற்பத்தி மற்றும் தேயிலை தொழில் முடங்கியிருப்பதுடன் பொருளாதாரபிரச்சினைகள் அதிகரித்துள்ளன . இந்தச் சூழ்நிலையில், இலங்கையில் மேற்கொண்டு முதலீடு செய்வதில் சீனா ஆர்வம் காட்டாதமை புரிந்துகொள்ளத்தக்கது. பாகிஸ்தானிலும் இதுஇடம்பெற்றுள்ளது.
2022 பெப்ரவ4 இல் 74 வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் கருப்பொருள் “சவால்களை வெல்லும் சுபிட்ச மான தாய்நாடு” என்று அமைவது தொடர்பாக பிரதமர் மகி ந்த ராஜபக்ச முடிவு செய்துள்ளார். அதை நனவாக்க, இந்தியாவின் உதவி அவசியம். அதைப் பெற, இலங்கை இன்னும் கொஞ்சம் நேர்மையைக் காண்பிப்பதுடன் கூடுதல்தூரம் செல்ல வேண்டும்.
பிரதமர் நரேந்திர மோடி முதல் வெளிவிவகார அமைச்சர்கள் மற்றும் பாதுகாப்புத் தலைவர்கள் வரை, கிட்டத்தட்ட அனைத்து இந்தியப் பிரமுகர்களும் இலங்கை த் தீவுக்குச் சென்ற போது, இடம்பெற்றிருந்த ​​இந்தியாவின் அரசியல் மற்றும் தேசிய பாதுகாப்புக் கவலைகள் பற்றிய எந்தக் குறிப்பும் பசிலின் வருகை குறித்த அறிக்கையில்உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை . ஈழப்போரின் போது இன நல்லிணக்கத்தை வென்றெடுப்பதற்கான ஒரு அங்கமாக ஜனாதிபதி மகி ந்த ராஜபக்ச அவர்கள் வழங்கிய அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கான வாக்குறுதிகளை நிறைவேற்றுவதும் இந்தியப் பிரமுகர்களின், விஜயங்களின்போது இடம் பிடித்திருந்தது
“பெரிய மீன்கள் சிறிய மீன்களை எவ்வளவு உரிமையுடன் சாப்பிடுகிறதோ, அவ்வளவுக்கு உரிமையுடன் சாப்பிடுகின்றன” என்ற பதினேழாம் நூற்றாண்டின் டச்சு தத்துவஞானி ஸ்பினோசாவின்இழிந்த கூற்று, தற்போது இந்திய பசிபிக்கின் ஒரு பகுதியான இந்துசமுத்திரத்தில் பெரியதொரு அதிகாரப் போட்டியின் மத்தியில் இலங்கை தன்னைக் கண்டுக்கொண்டிருப்பது நினைவுக்கு வருகிறது. 2020 இல் அவர்களின் உறவு தெற்கே சென்ற பிறகுஇந்தியாவும் சீனாவும் தங்கள்பலத்தை காண்பிக்கிறபோது இது அதிகமாகும்.
சீனாவுடன் பழகும் போது இலங்கை இதனை கவனத்தில் கொள்வது புத்திசாலித்தனமாக இருக்கும். ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் கீழ், சீனா எதிர்வரும் ஆண்டில் இலங்கையில் தனது களத்தை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம்.,புவியியல் ரீதியாகநெருக்கமாகவிருக்கும் இந்தியா,, தெற்காசிய நாடுகளின் குடும்பத்தின் ஒரு பகுதியாக, சீனாவிற்குமாறாக இந்தியா இங்கு அதிகளவுக்கு அணுகக்கூடியதாக உள்ளது. ஆனால், இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்பதற்கான அறிகுறிகளை இந்தியா காட்டுகிறது, அதை இலங்கைஅதனை கவனத்தில் கொள்ளும் என்று ஒருவர் எதிர்பார்க்கமுடியும்.
பெர் ஸ்ட் போஸ்ட்

Web Design by Srilanka Muslims Web Team