டில்லியில் நள்ளிரவில் நடந்த என்கவுண்டர்! - மூன்று பேரைப் போட்டுத் தள்ளியது பொலிஸ். - Sri Lanka Muslim

டில்லியில் நள்ளிரவில் நடந்த என்கவுண்டர்! – மூன்று பேரைப் போட்டுத் தள்ளியது பொலிஸ்.

Contributors

டில்லியில் பொலிசார் நடத்திய என்கவுன்டரில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். டில்லியில் நேற்று நள்ளிரவில் பொலிசாருடன் நடந்த மோதலில், பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி உட்பட மூன்று பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். கொலை, கொள்ளை, வழிப்பறி, கடத்தல் போன்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய நீட்டு போடியா என்பவரை பற்றித் துப்புக் கொடுத்தால் ஒரு லட்சம் ரூபாய் பரிசு தரப்படும் என டில்லி பொலிசார் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், நேற்றிரவு கிடைத்த ரகசிய தகவலின்படி, சிறப்புப்படை போலீசார் அவரைப் பிடிப்பதற்காக வசந்த் கன்ச் என்ற இடத்திற்கு சென்றனர். அங்கு அவர்கள் மூன்று பேரையும் பொலிசார் சுற்றி வளைத்தனர். சரணடையுமாறு கேட்டுக்கொண்டிருக்கும் போதே, அவர்கள் பொலிசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து பாதுகாப்புக்காக பொலிசார் திருப்பிச் சுட்டதில் நீட்டு போடியாவும், அவருடன் இருந்த இரண்டு பேரும் உயிரிழந்தனர்.

Web Design by Srilanka Muslims Web Team