டுபாய் தண்ணீர் தாங்கியில் இலங்கையரின் சடலம் மீட்பு! - Sri Lanka Muslim

டுபாய் தண்ணீர் தாங்கியில் இலங்கையரின் சடலம் மீட்பு!

Contributors

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் டுபாய் நாட்டின் அல்-குயோஸ் என்ற இடத்தில் உள்ள தொடர் மாடி குடியிருப்பில் உள்ள தண்ணீர் தாங்கியில் இருந்து இலங்கை பிரஜை ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்தனர்.

உணவகம் ஒன்றில் ஒன்றில் சமையல் வேலை செய்து வந்த 34 வயதான இலங்கை பிரஜையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் முதல் இவர் காணாமல் போயிருந்ததாக அவரது நண்பர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.

குடியிருப்பில் பயன்படுத்தப்படும் குடிநீரில் துர்நாற்றம் வீசியதை அடுத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் தண்ணீர் தாங்கியில் ஒருவர் இறந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இறந்தவர் ரஷ்ய உணவகம் ஒன்றில் பணியாற்றி வந்த நிலையில் அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.

இதனால் ஏற்பட்ட மன வேதனையில் மது அருந்து விட்டு தற்கொலை செய்திருக்கலாம் எனக்கூறப்படுகிறது.

கடந்த 5 ஆம் திகதி மீட்கப்பட்ட இந்த சடலம் தொடர்பான விசாரணைகளை டுபாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Web Design by Srilanka Muslims Web Team