டோஹாவில் இலங்கையர்கள் தங்கியிருந்த விடுதியில் தீ - Sri Lanka Muslim

டோஹாவில் இலங்கையர்கள் தங்கியிருந்த விடுதியில் தீ

Contributors

டோஹாவில் இலங்கையர்கள் தங்கியிருந்த விடுதியில்  தீ விபத்து ஏற்பட்ட நிலையில், அந்த விடுதி முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. குறித்த விடுதியில் நேற்று  வியாழக்கிழமை இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த விடுதியில் இலங்கையைச் சேர்ந்த 105 பேர் தங்கியிருக்கின்றனர். இவர்கள் அனைவரும் நேற்று வியாழக்கிழமை தொழிற்சாலைக்குச் சென்றபோதே இந்த தீ விபத்து ஏற்பட்டதாக குறித்த விடுதியில் தங்கியிருக்கின்ற இலங்கையர் ஒருவர் தெரிவித்தார்.

மின்னொழுக்கு காரணமாகவோ அல்லது எரிவாயு சிலின்டர்கள் வெடித்தோ குறித்த விடுதியில் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.

விடுதியில் தங்கியிருந்தவர்களின் கடவுச்சீட்டுக்கள் தவிர அனைத்துப் பொருட்களும் எரிந்து நாசமாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.

doha3

 

doha2

 

doha1

Web Design by Srilanka Muslims Web Team