தடுத்து வைக்கப்பட்ட இரு எம்.பிக்களும் வெளியேறினர் - Sri Lanka Muslim

தடுத்து வைக்கப்பட்ட இரு எம்.பிக்களும் வெளியேறினர்

Contributors

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து  பாராளுமன்ற உறுப்பினர்கள்   இருவர்  விசா சட்டத்தை மீறி கொழும்பில் ஊடகவியலாளர் மாநாட்டை நடத்துவதற்கு முயன்றனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பின்னர்  இருவரும்  விடுவிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .

அவுஸ்திரேலிய பாராளுமன்ற உறுப்பினர் லீ ரைனோன் மற்றும் நியூஸிலாந்து பாராளுமன்ற உறுப்பினர் ஜான் லொகீ ஆகிய இருவருமே இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்

அவர்கள் தமது நாடுகளுக்கு திரும்பிச் செல்ல விரும்பம் தெரிவித்ததை அடுத்து குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அவர்கள் திரும்பிச் செல்வதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

இவ்விருவரும் வடக்கிற்கு விஜயம் செய்ததுடன் யாழ்.மாவட்டத்தின் தற்போதைய நிலைமைகள் பற்றியும் பிரதேசத்திலுள்ள பிரச்சினைகள் பற்றியும் வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனுடன் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கதாகும்.-TC

Web Design by Srilanka Muslims Web Team