'தட்டுப்பாடு காரணமாக எரிவாயு விநியோகிக்கப்படமாட்டாது' - லிட்ரோ! - Sri Lanka Muslim

‘தட்டுப்பாடு காரணமாக எரிவாயு விநியோகிக்கப்படமாட்டாது’ – லிட்ரோ!

Contributors

எரிவாயு கையிருப்பு இல்லாமை காரணமாக எதிர்வரும் 25ஆம் திகதி வரை சமையல் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க முடியாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
லிட்ரோ நிறுவனம் ஏப்ரல் 12ஆம் திகதி முதல் சமையல் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளது.
இம்மாதம் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் 3,600 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய இரண்டு கப்பல்கள் நாட்டை வந்தடையும் என்றும் அதன் பின்னர் விநியோக நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியும் என்றும் லிட்ரோவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனினும், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள் மற்றும் தகனச்சாலைகள் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு எரிவாயு விநியோகம் தொடரும் என லிட்ரோ தெரிவித்துள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team