‘தண்ணீருக்கு எத்தனை கண்கள்’ நூல் அறிமுக விழா!

Read Time:1 Minute, 7 Second

கவிஞர் சோலைக்கிளி எழுதிய ‘தண்ணீருக்கு எத்தனை கண்கள்’ நூல் அறிமுக விழா சனிக்கிழமை (17)  கல்முனை  தனியார்  மண்டபத்தில் அருந்தந்தை அன்புராசா தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் பிரதம அதிதிகளாக ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் கலந்துகொண்டு, கவிதை நூலை வெளியீட்டு வைத்தார்கள்.

கலாபூசணம் பாலமுனை பாறூக், எழுத்தாளர் எஸ்.எல்.மன்சூர், கவிஞர்களான உமாவரதராஜன், அக்கரையூர் அப்துல் குத்தூஸ் ஆகியோர் இலக்கிய சிறப்பு அதிதிகளாகவும் கலந்துகொண்டனர். எழுத்தாளர்களான எம். அப்துல் றஸ்ஸாக், பேராசிரியர் எஸ்.எம் ஐயூப் ஆகியோர் நூல் மீதான உரையை நிகழ்த்தினர்.

Previous post நீர் விநியோகம் துண்டிக்கப்படும்!
Next post “கிழக்கை தனித்து கையாள்வதற்கு இடமளிக்க முடியாது” – சுமந்திரன்!