தனக்கு கிடைத்த 750,000 சவூதி ரியால்களை வக்பு செய்தார் சாகிர் நாயக் - Sri Lanka Muslim

தனக்கு கிடைத்த 750,000 சவூதி ரியால்களை வக்பு செய்தார் சாகிர் நாயக்

Contributors
author image

Junaid M. Fahath

டாக்டர் ஜாகிர் நாயக்கிற்கு சவூதி அரசர் சல்மான் விருது வழங்கினார் : ரூ 1 கோடி 20 லட்சத்தையும் வக்புக்கு வழங்குகிறேன் – ஜாகிர் நாயக் அறிவிப்பு….!!

 

உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கும் சர்வதேச சாம்ராஜ்ஜியமான சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் இஸ்லாமிய சேவை புரிந்தமைக்காக டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களுக்கு சவூதி அரேபியாவின் உயரிய விருதான மன்னர் பைசல் விருதை அரசர் சல்மான் வழங்கி கௌரவித்தார்.

 

24 கேரட் 200 கிராம் தங்க பதக்கம், 7 லட்சத்தி 50 ஆயிரம் சவூதி ரியால் (இந்திய மதிப்பில் ஒரு கோடி 20 லட்சம்) மற்றும் அரபியில் எழுதப்பட்ட சான்றிதழ் வழங்கப்பட்டது.

 

விழாவில் பேசிய டாக்டர் ஜாகிர் நாயக்…..

 

இஸ்லாம் மட்டுமே இறைவனால் அங்கீகரிக்கப்பட்ட மார்க்கம், இந்த உலகுக்கு அமைதி வேண்டுமென்றால் அது இஸ்லாத்தினால் மட்டுமே முடியும், இஸ்லாத்தினால் மட்டுமே அது சாத்தியம் ஆகும் என்று தெரிவித்தார்.

 

மேலும் தாம் பெற்ற ரூ1.கோடி 20 லட்சம் ரூபாய் பணத்தை வக்பு சொத்துக்கு வழங்குவதாக அறிவித்துள்ளார்.

zakir zakir.jpg2 zakir.jpg2.jpg3

Web Design by Srilanka Muslims Web Team