தனது அனுமதியின்றி இரண்டாம் திருமணம் செய்து கொண்ட கணவரை சுட்டுக்கொன்ற சவூதிப் பெண் - Sri Lanka Muslim

தனது அனுமதியின்றி இரண்டாம் திருமணம் செய்து கொண்ட கணவரை சுட்டுக்கொன்ற சவூதிப் பெண்

Contributors

-ரியாத்-

கணவன் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் என அவரை சுட்டுக் கொன்றுள்ளார் சவுதிப் பெண் ஒருவர்.

 

தனது எதிர்ப்பையும் மீறி வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட கணவனை முதல் மனைவி துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

சவுதியின் வடக்கு எல்லைப் பிரதேசமான அல்-ஜவுஃப் பகுதியை சேர்ந்த ஒருவர், தனது முதல் மனைவியின் விருப்பத்துக்கு மாறாக சில தினங்களுக்கு முன்னர் இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

 

இது தெரிய வந்ததும் ஆவேசமடைந்த முதல் மனைவி, உல்லாச வாழ்க்கைக்கு திட்டமிட்டிருந்த கணவனையும், அவரது புது மனைவியையும் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டார்.

 

இதில் உடலின் பல பகுதிகளில் குண்டு பாய்ந்த கணவன், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியாகினார்.

 

அவரது இரண்டாவது மனைவி குண்டு காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Web Design by Srilanka Muslims Web Team