தனிநபர் கடன் ரூ.8 இலட்சமாக அதிகரிப்பு..! - Sri Lanka Muslim
Contributors
author image

Editorial Team

தற்போதைய சூழ்நிலையில் இலங்கையர் ஒருவரின் தனிநபர் கடன் சுமார் 800,000 ரூபாயாக அதிகரித்துள்ளது என்று தெரிவித்த சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர, இலங்கை ரூபாயின் தொடர்ச்சியான வீழ்ச்சி மற்றும் டொலரின் விலை அதிகரிப்பு என்பனவற்றை கட்டுப்படுத்த முடியவில்லை என்பதை தற்போதைய நிர்வாகம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

நாடு அனைத்து துறைகளும் சவால்களை எதிர்நோக்கி வருவதாகவும் நாட்டின் வெளிநாட்டுக் கடன் ரூ.17.2 ட்ரில்லியனாக உள்ளது என்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

1970 ஆம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்க பதவியேற்ற போது அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி 9 ரூபாயாகக் காணப்பட்டதாகவும், 1977 ஆம் ஆண்டளவில் அதன் பெறுமதி 7 ரூபாயாக குறைவடைந்ததாகவும் அமைச்சர் அமரவீர சுட்டிக்காட்டினார்.

1977 ஆம் ஆண்டு முதல் அனைத்து அரச தலைவர்களாலும் அரசாங்கங்களாலும் வெளிநாட்டுக் கடனைக் குறைக்க முடியவில்லை என கூறினார்.

அமெரிக்க டொலரொன்றின் மதிப்பு ரூ.200 முதல் 240 வரை உள்ளதால், நாட்டின் டாலர் கையிருப்பு வேகமாக குறைந்துள்ளது என்றும் இந்த நிலை எதிர்காலத்திலும் தொடரலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team