தமாமில் வசித்து வரும் இலங்கையர்கயர்களின் பாடசாலை ஆரம்பம் - Sri Lanka Muslim

தமாமில் வசித்து வரும் இலங்கையர்கயர்களின் பாடசாலை ஆரம்பம்

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

சவூதி அரேபியாவின் கிழக்கு பிராந்தியத்தில் குடும்பத்துடன் வசித்து வரும் இலங்கையர்களுக்கு சொந்தமான ஒரு பாடசாலை சுமார் இருபது வருடங்களாக மிக முக்கியமாகவும் அவசரத் தேவையாகவும் உள்ளது என்பதை நாம் அறிவோம். றியாத், மற்றும் ஜித்தா போன்ற பிரதேசங்களில் இவ்வாறானபாடசாலைகள் இயங்குவதன் மூலம் நம் நாட்டின் அபிலாசைகள், மொழி, கலாச்சாரம் என்பன பேணப்படுவதைக் காணலாம்.

 

இதற்கான ஆக்கபூர்வமான முயற்சிகளை யாரும் முன்னெடுப்பாதாக தெரியவில்லை. இதனால் இப்பிரதேசத்தில் வசிக்கும் எமது பிள்ளைகள் தமது சுய விருப்புகளையும், கலாச்சாரத்தையும் இழந்தவர்களாகவும், பிறநாட்டவரின் கலாச்சார விழுமியங்களை நிர்பந்த நிலையில் பின்பற்ற வேண்டிய ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருப்பதை அவதானிக்கலாம்.

 

முன்னர் இப்பிரதேசத்தில் வசிப்பவர்கள், இந்தியா, பாக்கிஸ்தான் மற்றும் வங்காளதேசம் போன்ற நாட்டுச் சமூகத்துக்கான பாடசாலைகளில் தமது பிள்ளைகளின் கல்வியை தொடரும் வாய்ப்பு இருந்தது. ஆனால் வேறு நாட்டு மாணவர்களின் அதிகரிப்பால், இலங்கை மாணவர்களுக்கான வாய்ப்பு, சலுகைகள் முழுமையாக நிறுத்தப் பட்டுள்ளமையால் எமது சமூகம் பெரிய பாதிப்பை சந்தித்துள்ளதை அறிய முடியும்.

 

குறைந்த வருமானம் பெறும் பெற்றோர் மற்றும் அதிக குழந்தைகள் கொண்ட பெற்றோர் தமது குழந்தைச் செல்வங்களின் கல்வியை தொடர முடியாத நிலையில் திண்டாடுகின்றனர். வேறு சிலரோ குழந்தைகளின் நலன் கருதி விஸாவை ரத்துச் செய்து குடும்பத்தை நிரந்தரமாக இலங்கைக்கு அனுப்பியுள்ளனர். மற்றும் சிலர் மன அழுத்தத்துடன் இரண்டும் கெட்டான் நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

 

இச்சந்தர்ப்பத்தில்தான் SLBF ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்திலே எல்லோராலும் முதன் முதலில் முன் வைக்கப்பட்ட முதலாவது யோசினை எமது சமூகத்திற்கான பாடசாலையின் தேவையே! இந்தேவையை நிறைவு செய்யும் பொருட்டு SLBF யின் திட்டங்களின் பிரகாரம் பாடசாலையின் வேலைத் திட்டங்களை முன்னிலைப் படுத்த வேண்டிய கட்டாயத் தேவை ஏற்பட்டது. இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் சவூதி அரேபியா கல்வி அமைச்சினை நெருங்கி சகல வழி காட்டுதல்களையும் பெற்றுக் கொண்டது.

அதன் அடுத்த நகர்வாக எமது றியாத் இலங்கைப் பாடசாலை நிர்வாகத்தைச் சந்தித்து தம்மாம் பிராந்திய பாடசாலை ஒன்றை நிர்வகிப்பதற்கான ஆலோசனைகளைப் பெற்றுக் கொண்டது. இதனைத் தொடர்ந்து இப் பிரதேசத்தில் வசிக்கும் பெற்றோர்களைக் கொண்ட ஒரு குழுவை உருவாக்கி இக்குழுவில் உருப்பினர்களாக பல கம்பனிகளின் ஆற்றல் மிக்க, திறமைவாய்ந்த நிருவாகிகளும், தம்மாம் நகரின் பிரபல பாடசாலை ஒன்றின் பிரதி அதிபரும், சவூதி அரச நிர்வாக சேவையில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற ஒருவரும், தகவல் தொழில்நுட்பம், திட்டமிடல் அமுலாக்கல் சம்மந்தமாக சிறப்புத் தேர்ச்சி பெற்ற பல கல்விமான்களும் அடங்கியிருப்பது இதன் சிறப்பம்சமாகும்.

 

இந் நற்பணியை மேற்கொள்ளும் நிர்வாக உறுப்பினர்கள்.
1. Mr. Mohamed Khaleel- Managing Director of FIGCO Saudi/Sri Lanka/New Zealand
2. Mr. M.M. Mohamed Nawfal –B Sc Hons, MSc. PGDE & V.P.BISD
3. Mr. M. Thoushad Thowfeek(Roshan) – Proprietor of Sri Lankan Restaurant Dammam
4. Mr. Jebarullah M. Haneefa B.A (Naleemi) – HR & Admin Officer
5. Mr. Nihar M Ismail – BBA (UK), PGDM (UK), MBA Project Management

 

ஆலோசகர்கள்
1. Mr. M.S.M. Makeen-B.A, Hons Riyadh, Naleemi- An Officer at Ministry of Culture & Information
2. Charley Thalayaratna- Proprietor at PC Cargo
3. Mr. Kahadawala Arachchige Dayaratna-General Managerof Al Soudah Cont.Est.
நாம் கனவு கண்டுகொண்டிருந்த சமூகப்பாடசாலை திட்டத்தை வெற்றிப்பாதையில் கொண்டு செல்ல இக்குழு முன்வந்துள்ளது.
சமூகப் பாடசாலை ஒன்றை ஆரம்பிப்பதாயின் சவூதிக் கல்வி அமைச்சின் சட்ட திட்டங்களை முழுமையாக பேணப்படுவதோடு, வேறு எந்தவொரு வெளி சக்தியும் மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ தலையிட முடியாது என்பதை யாவரும் அறிந்து கொள்ளல் வேண்டும்.

 

இச்சமூகப் பாடசாலைத் திட்டத்தை நடைமுறைபடுத்த மிக இன்றியமையாத தேவை-சவூதிக் கல்வி அமைச்சின் அனுமதிப் பத்திரம், (Community School License)

 

1-இதனைப் பெற்றுக் கொள்ள இப்பிரதேசத்தில் வாழும் இலங்கை பெற்றோர்களை பிரதிநிதிப்படுத்தும் ஒரு குழு முன்வர வேண்டும்,

 

2- பெற்றோருக்கும் மற்றும் சவூதி கல்வி அமைச்சுக்கும் பொறுப்புக் கூறவேண்டிய கடமைப்பாடு இக்குழுவை சார்ந்ததாக இருக்கும்.

 

3-இக்குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களின் செயற்பாட்டை முன்னெடுத்து செல்ல தனது கபிலின் (Sponsor) அனுமதி உறுதிப்படுத்தப் பட்ட சான்றுபகரும் கடிதம்,

 

4-இலங்கைத் தூதரகம் இக்குழுவில் உள்ள உறுப்பினர்கள் (Non Diplomatic) என்றும் இவர்களால் இந்தப் பாடசாலைத் திட்டத்தை முன்னெடுத்துச் சொல்ல பரிந்துரைக் கடிதம் (Recommendation Letter).

 

5- வங்கி, நிதி அறிக்கை (Bank Guarantee)

 

6-கிழக்குப் பிராந்தியத்தில் இலங்கை வாழ் பெற்றோர் பிள்ளைகளின் விபரக் கொத்து. (Parent and Student Data Collection)

 

இந்த விபரக்கொத்து திரட்டும் நடவடிக்கையில் நீங்கள் உத்துழைப்பு வழங்குவதுடன், எமது சமூகத்துகாக உயரிய நோக்கில் இப் பாடசாலைக்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் இக்குழுவை ,உங்களது பிரதிநிதியாக உறுதி செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
தற்போது இவர்கள் முழு நேரத்தையும் முழுமையாக இத்திட்டத்தை சரிவர நிறைவேற்ற வே ண்டும் என்ற ஒரே ஒரு நோக்கத்தில் வேலை செய்து கொண்டிருக்கின்றார்கள். மேற்கூறப்பட்ட குழுவினர் பொருத்தமற்றவர்கள் எனயாராவது கருதினால், இவர்களை விட திறமையான குழு ஒன்று முன்வர விரும்பினால் இவர்கள் இப்பொறுப்பை அவர்களிடம் ஒப்படைக்கவும் தயாராக உள்ளனர் என்பதையும் இச்சந்தர்ப்பத்தில் அறியப்படுத்துகின்றோம். எமது நோக்கம் எமது சமூகத்தின் உயர்ந்த நலனைத் தவிர வேறேதுமில்லை.

 

இக் குழுவானது எதிர்வரும் செப்டம்பர் மாதம் தொடரவிருக்கும் கல்வியாண்டை மையப் படுத்தி செயற்படுவதனால் எமது தூதரக பரிந்துரைக் கடிதம் இம்மாதம் 10ம் திகதிக்குள் கிடைக்கும் பட்சத்தில் இவர்களால் இப் பணியை தொடர முடியும். இல்லையெனில் இக்குழு எதிர்கால அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும், நடவடிக்கைகளிலிருந்தும் முழுமையாக நீங்கிக் கொள்ளும் என்பதை அறியத் தருகின்றோம்.

 

இது சம்மந்தமாக உங்களது ஆக்கபூர்வமான கருத்துக்களை பின்வரும் மின்னஞ்ஞல் ஊடாக தெரியப்படுத்தவும். srilankanbfd@gmail.com

 

சமூகப் பாடசாலை ஏற்பாட்டுக் குழு
தம்மாம்.

 

உங்கள் கனவுகளை நிஜமாக்க எங்களுடன் கை கோருங்கள்

Web Design by Srilanka Muslims Web Team