தமிழ்மொழியை அரசகரும மொழியாக்க அரசாங்கம் அனுமதிக்கக்கூடாது: பொதுபலசேனா வலியுறுத்தல்

Read Time:53 Second

தமிழ்மொழியை அரசகரும மொழியாக மாற்றுவதற்கு அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது. சிங்கள பௌத்த நாட்டிற்கென்ற தனித்துவத்தினை அரசாங்கம் எப்போதும் கடைப்பிடிக்க வேண்டும் என பொதுபல சேனா பௌத்த அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் இலவசக் கல்வியினை இல்லாதொழிக்கும் வகையில் அண்மைக்காலங்களில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமைந்துள்ளன. நாட்டில் தனியார் கல்வியினைப் பரப்பி அப்பாவி பொதுமக்களின் பணத்தை கொள்ளையடிக்க நாம் இடமளிக்க மாட்டோம் எனவும் அவ்வமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

Previous post ஊழல் சுட்டியில் 91 ஆவது இடத்தில் இலங்கை
Next post இந்திய குழந்தைகள் முறையான இசைக்கல்வியை பெறவேண்டும்: நியூயார்க்கில் ஏ.ஆர். ரகுமான்