தரமற்ற பொலிஸ் சீருடை; அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக பொலிஸார் தெரிவிப்பு!

Read Time:1 Minute, 20 Second

பொலிஸ் சீருடைகள் தரமற்றதாக இருப்பதால் தாம் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சீருடையை ஒருமுறை துவைத்தவுடன் சீருடையின் நிறம் மற்றும் அளவு மாறுவதுதான் முக்கிய பிரச்சினையாக உள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனால், வெளிக் கடைகளில் பணம் கொடுத்து சீருடை வாங்க வேண்டியுள்ளது என்கின்றனர். இப்பிரச்சினையால் பொலிஸ் உயரதிகாரிகளும், அதிகாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உயர் அதிகாரிகளின் அனுசரணையுடன் சீருடைகள் வாங்கப்படுகிறதே தவிர, தரம் சரிபார்க்கப்படாமல் இருப்பதே இதற்குக் காரணம் என காவல்துறை உள் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் உரிய பிரிவுகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

Previous post சஜித் அணியிலிருந்து வெளியேறுகிறார் சம்பிக்க..!
Next post ரணில் – பசில் இரகசிய சந்திப்பு; வெளியான தகவல்!