தற்காலிக பாதுகாப்பு வீசா புகலிடக் கோரிக்கையாளர்களின் மனித உரிமைகளை உதாசீனம் செய்யும் வகையில் உள்ளது! - Sri Lanka Muslim

தற்காலிக பாதுகாப்பு வீசா புகலிடக் கோரிக்கையாளர்களின் மனித உரிமைகளை உதாசீனம் செய்யும் வகையில் உள்ளது!

Contributors

(gtn)

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் தற்காலிக பாதுகாப்பு வீசா நடைமுறை, புகலிடக் கோரிக்கையாளர்களின் மனித உரிமைகளை உதாசீனம் செய்யம் வகையில் அமைந்துள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில், புதிதாக ஆட்சி அமைத்த அவுஸ்திரேலிய அரசாங்கம் கடுமையான கொள்கைகளை பின்பற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 1998ம் ஆண்டில் பிரதமர் ஜோர்ன் ஹோவார்ட் காலத்திலும், தற்காலிக பாதுகாப்பு வீசா முறைமை அமுலில் இருந்தது. எனினும், இந்த வீசா முறைமையானது புகலிடக் கோரிக்கையாளர்களின் உரிமைகளுக்கு புறம்பானது என சர்வதேச மன்னிப்புச் சபையின் பேச்சாளர் கிரஹம் மெக்ரீகர் தெரிவித்துள்ளார்.

மெய்யான புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதனை விடவும் இந்த அரசாங்கம் கடந்த காலத் தவறுகளை மீள இழைத்து, புகலிடக் கோரிக்கையாளர்களை தண்டிக்க முனைப்பு காட்டி வருவதாகக் குறிப்பி;ட்டுள்ளார். இந்த வகை வீசா வழங்கப்பட்ட பலர் உள ரீதியான பாதிப்புக்களுக்கு இலக்காகியிருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

இந்த தற்காலிக பாதுகாப்பு வீசா, மூன்றாண்டுகளுக்கு அவுஸ்திரேலியாவில் தங்கியிருந்து பாதுகாப்பு பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் வழங்கிய போதிலும், நிரந்தரமாக பாதுகாப்பு பெற்றுக்கொள் வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குடும்ப மீள் இணைவு அல்லது நிரந்தர குடியுரிமை போன்ற வாய்ப்புக்கள் இந்த வகை வீசா வழங்கப்படுவோருக்கு கிட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Web Design by Srilanka Muslims Web Team