தலைமைத்துவத்தின் நிர்ப்பந்தமா? நல்லாட்சிக்கான சமூக ஒற்றுமையா? -ஆரிப் சம்சுடீன் PRESS RELEASE - Sri Lanka Muslim

தலைமைத்துவத்தின் நிர்ப்பந்தமா? நல்லாட்சிக்கான சமூக ஒற்றுமையா? -ஆரிப் சம்சுடீன் PRESS RELEASE

Contributors
author image

Press Release

தலைமைத்துவத்தின் நிர்ப்பந்தமா? நல்லாட்சிக்கான சமூக ஒற்றுமையா? என்ற சூழ்நிலை ஏற்பட்டபோது நல்லாட்சிக்கான சமூக ஒற்றுமைக்கு முன்னுரிமை வழங்க தீர்மானித்து பொது எதிரணி ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து கொண்டேன் என தேசிய காங்கிரஸின்; கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் தெரிவித்தார்.

 

பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவினை ஆதரித்து நேற்று(3.1.2015) பொலனறுவை தம்பால எனும் இடத்தில் நடைபெற்ற கூட்;டத்தில் அவருடனு; இணைந்து கொண்டது தொடர்பாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 

அவ்வூடக அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.
இந்நாட்டில் வாழும் சகல இன மக்களும் நல்லாட்சிக்கான மாற்றம் வேண்டும் என்ற ஒரே கருத்திலு;; ஒன்றினைந்து அதற்காக செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சிறுபான்மை சமூகமான தமிழர்களும் முஸ்லிம்களும் அதன் தொடரில் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

அந்தப் பயணம் வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கையில், முஸ்லிம் சமூகம் அதில் உரு அங்கமாக இணைந்துள்ள நிலையில், இந்த சமூகத்தின் வாக்குகளைப் பெற்று மக்கள் பிரதிநிதிகளாக உள்ள நாம் அவர்களின் சமூக உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது தார்மீக் பொறுப்பாகும்.

 

அந்தப் பொறுப்பை தேசிய காங்கிரஸும் நிறைவேற்ற வேண்டும் என்ற எனது நிலைப்பாட்டை ஒரு மாதகாலமாக தொடர்ச்சியாக கட்சியின் தலைமைத்துவத்துடன் எடுத்துரைத்தபோதிலும், கட்சியின் தலைமைத்துவம் தமது நிலைப்பாட்டிலிருந்து மாறவில்லை. அதனால் கட்சி தலைமைத்துவித்தின் நிலைபாட்டு மாறாக தீர்மானம் எடுக்கவேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டு இந்த முடிவுக்கு வர வேண்டி ஏற்பட்டது.

 

அத்துடன், இந்த அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் கடும்போக்காளர்களினால்; இந்நாட்டில் வாழும் சிறுபான்மையினருக்கு குறிப்பாக முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியினை இந்தத் தேசமும் சர்வதேசமும் அறியும்.

 

இதன்நிமித்தம் இந்நாட்டில் வாழும் முஸ்லிம்கள் வெகுவாக உள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பாதிப்பில் நானும் பங்குகொண்டவன் என்ற வகையில் சமூக உணர்வைப் புறந்தள்ளி, மனச்சாட்சிக்கு விரோதமாக என்னால் செயற்பட முடியவில்லை.

 

கடும்போக்காளர்கள் முஸ்லிம்களின் ஆன்மீக செயற்பாட்டில் இடையூறுகளை விளைவித்தபோது, அவ்வமைப்புகளை தடை செய்யுமாறு கிழக்கு மாகாண சபையினூடாக வலியுறுத்தினோம். இந்நாட்டில் சிறுபான்மை சமூகம் நிம்மதியாக வாழ வேண்டுமாயின்; இவ்வமைப்புக்கள் தடை செய்யப்படுவது அவசியம் என அறிக்கைகளினூடாக கோரிக்கைகளை இந்த அரசாங்கத்திடம் முன்வைத்தோம். அதனை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் ஒரு பொருட்டாகக் கொள்ளவில்லை. அவற்றைத் தடை செய்வதற்கான எந்தவொரு ஆரோக்கியமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

 

பல்லின சமூகம் வாழும் ஒரு நாட்டின் அரசாங்கம் அந்நாட்டில் வாழுகின்ற சமூகங்களைப் பாதுகாக்க வேண்டியது சமூகப் பொறுப்பாகும். அதில் தவறிழைக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில்தான், இந்நாட்டில் சமதானமும் நல்லாட்சியும் ஏற்படுத்தப்பட வேண்டும்;. அதனை ஏற்படுத்துவதற்காக தனது உயிரையும் துச்சமென மதித்து ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட களம் இறங்கியுள்ள மைத்திரிபால சிறிசேனவுடன் இந்நாட்டு மக்கள் ஒன்றிணைந்து அவரின் வெற்றிக்காக செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

 

அந்தவகையில் நானும் இந்த முஸ்லிம் சமூகத்தை, இப்பிரதேச மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் மக்கள் பிரதிநிதி என்ற வகையில் சமூக உணர்வுகளுக்கு மதிப்பளித்து பொது எதிரணி வேட்பாளருடன் இணைந்து அவரின் வெற்றிக்காக எஞ்சியுள்ள நாட்களில் முழு மூச்சுடன் செயற்பட உறுதிபூண்டுள்ளதோடு எதிர்வரும் 8ஆம் திகதி மைத்திரிபாலவின் வெற்றிக்காக அன்னம் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுப்பதாகவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் விடுத்துள்ள ஊடக் அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team