தானிஷ் அலி பிணையில் விடுதலை! - Sri Lanka Muslim
Contributors

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்குள் பலவந்தமாக நுழைந்த சம்பவம் தொடர்பில், கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தானிஷ் அலியை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க உத்தரவிட்டுள்ளார்.

குறித்த வழக்கு இன்று (15) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே அவருக்கு இவ்வாறு பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதனடிப்படையில், சந்தேகநபரை 25,000 ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையிலும் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் சந்தேக நபரை மேலும் விளக்கமறியலில் வைக்க போதிய சட்சிகள் இல்லை என்பதால் நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் சந்தேகநபரை கறுவாத்தோட்டம் பொலிஸாரிடம் சென்று வாக்குமூலம் வழங்குமாறு நீதவான் உத்தரவிட்டார்

Web Design by Srilanka Muslims Web Team