திடீரென மாகாண எல்லைகளில் குவிக்கப்பட்ட படைகள்! காரணம் என்ன.? - Sri Lanka Muslim

திடீரென மாகாண எல்லைகளில் குவிக்கப்பட்ட படைகள்! காரணம் என்ன.?

Contributors
author image

Editorial Team

மாகாணங்களுக்கு இடையிலான எல்லைப் பகுதிகளில் வீதித்தடைகளில் முன்னெடுக்கப்படும் சோதனை நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவினால் (Sarath Weerasekara) பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய எல்லைப் பகுதிகளில் திடீர் வாகன பரிசோதனைகளை அதிகரிக்குமாறும் பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார். இதற்காக கூடுதல் அதிகாரிகளும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

விடுமுறை தினங்கள் என்பதால் பலர் மாகாண எல்லைகளை கடக்கக்கூடும் என்பதால் கடுமையான பரிசோதனையை முன்னெடுக்குமாறு சிறிலங்கா அரச அதிபரும் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team