திரிவுபடுத்தப்பட்ட 2 இலட்சம் குர்ஆன் பிரதிகள் மக்காவில் இன்று மீட்பு - Sri Lanka Muslim

திரிவுபடுத்தப்பட்ட 2 இலட்சம் குர்ஆன் பிரதிகள் மக்காவில் இன்று மீட்பு

Contributors
author image

Office Journalist

மக்காவில் 2 இலட்சத்திற்கு அதிகாமான திரிவுபடுத்தப்பட்ட  குர்ஆன் பிரதிகளை சவுதிப் பொலிசார் இன்று சனிக்கிழமை(20) கைப்பற்றியுள்ளனர்.

 

 

திரிவுபடுத்தப்பட்ட இக் குர்ஆன் பிரதிகள் ஆசிய நாட்டு தொழிலாளர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

 

 

இவ்வாறு கைப்பற்றப்பட்ட குர்ஆன் பிரதிகளும் சந்தேக நபர்களும் பொலிஸ் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

 

 

சவுதி அரேபியாவின் பல பாகங்களில் கடந்த காலங்களில் பல ஆயிரம் திரிவுபடுத்தப்பட்ட குர்ஆன் பிரதிகள் பொலிசாரால் கைப்பற்றப்பட்டன. திரிவுபடுத்தப்பட்ட  இக் குர்ஆன் பிரதிகளை ஷீயாக்கள் மக்காவினுள் நுழைத்தமை பொலிசார் கண்டுபிடித்தனர்.

 
.
அவ்வாறு தற்போது கைப்பற்றப்பட்ட திரிவுபடுத்தப்பட்ட குர்ஆன் பிரதிகள் ஷீயாக்களால் மக்காவினுள் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் இந்நிலையில், இலங்கையிலும் பல ஆண்டுகளாக ஊடுருவி கால்பதித்துள்ள ஷீயாக்கள் இங்கு கல்லூரிகளை அமைத்து இலவச புலமைப்பரிசில்களை முஸ்லிம் மாணவர்களுக்கு வழங்கி இஸ்லாமிய கல்வி என்ற போர்வையில் ஷீயா சிந்தனையை போதித்து வருவதாக சிறிலங்கா முஸ்லிம்ஸ் இணையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

 

 

இலங்கையில் ஷீயாக்களின் ஊடுருவலுக்கு பல முக்கிய இலங்கை புள்ளிகள் ஆதரவு வழங்குவதாகவும் எமக்கு அறியக்கிடைக்கின்றது.

 

 

இலங்கையில் ஊடுருவியுள்ள ஷீயாக்கள் யார்? அவர்களுக்கு ஆதரவு வழங்கும் இலங்கையர்கள் யார்? என்பது தொடர்பான புலனாய்வுத் தகவல்கள் மிக விரைவில் அம்பலப்படுத்தப்படும்.

Web Design by Srilanka Muslims Web Team