திருகோணமலை APL கிண்ணத்தை சுவீகரித்தது மினா விளையாட்டுக் கழகம் - Sri Lanka Muslim

திருகோணமலை APL கிண்ணத்தை சுவீகரித்தது மினா விளையாட்டுக் கழகம்

Contributors
author image

Hasfar A Haleem

குருநாகல் அஸ்மா வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தின் அணுசரனையில் அல்அக்ஸா விளையாட்டுக் கழக ஏற்பாட்டில் முள்ளிப்பொத்தானை யுனிட் 10ல் அல்தாருஸ்ஸலாம் பாடசாலை விளையாட்டு மைதானத்தின் அண்மையில்(08) நடாத்தப்பட்ட அணிக்கு ஒன்பது பேர் கொண்ட APL கிண்ணத்திற்கான உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் 4ம் வாய்க்கால் மினா அணி சம்பியன் பட்டத்தைசுவீகரித்தது.

38 அணிகள் பங்கு பற்றிய இவ் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் இறுதிச் சுற்றுக்கு மினா மற்றும் அல்அக்ஸா அணியினர் ஒன்றையொன்று எதிர்த்தாடின இதில் இரண்டுக்கு பூச்சியம் என்ற கோல் கணக்கில் மினா அணியினர் APL கிண்ணத்துக்கான சம்பியன் பட்டத்தை சுவீகரித்தனர்.

இதன்போது வெற்றிபெற்ற அணிக்கான முதலாவது பரிசாக 15000 ரூபா பணப்பரிசும் கேடயமும் வழங்கப்பட்டதுடன் இரண்டாம் அணியான அல்அக்ஸா அணிக்கு 8000 ரூபா பணப்பரிசும் கேடயமும் வழங்கி வைக்கப்பட்டன.

இவ் இறுதிச் சுற்றுக்கு நிகழ்வின் பிரதம விருந்தினராக அஸ்மா டிரவல்ஸ் இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் எம்.ஆர்.எம்.சிஹான் நளீமி உட்பட ஆயிலியடி கிராமத்தின் முன்னால் கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் எஸ்.எம்.சிஹாஜித் போட்டியின் நடுவராக திரு நதீர் மற்றும் பார்வையாளர்கள் எனப்பலரும் பங்கேற்றனர்.

m m.jpg2

Web Design by Srilanka Muslims Web Team