திருமணம் நடந்த இரவே புதுமனைவியை விவாகரத்து; புகைப்படத்துடன் வந்த முன்னாள் காதலன் -சவுதியில் சம்பவம் - Sri Lanka Muslim

திருமணம் நடந்த இரவே புதுமனைவியை விவாகரத்து; புகைப்படத்துடன் வந்த முன்னாள் காதலன் -சவுதியில் சம்பவம்

Contributors

சவுதியில் தன் மனைவிக்கு திருமணமாவதற்கு முன் காதலன் ஒருவர் இருந்துள்ளார் என்பதை அறிந்த கணவர், திருமணமான அன்றே தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளார்.

 

சவுதி அரேபியாவில் அன்று புதிதாக திருமணமான ஜோடி ஒன்றிற்கு அவரது உறவினர்கள் ஹோட்டல் ஒன்றில் முதலிரவிற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

 

அப்போது அங்கு வந்த புதுப்பெண்ணின் முன்னாள் காதலன், அவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அவரது கணவரிடம் காட்டியுள்ளார். தன் மனைவி திருமணத்திற்கு முன்னர் வேறு ஆணை காதலித்துள்ளார் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்த அக்கணவர் நேராக மதபோதகரிடம் சென்றுள்ளார். அவரிடம் தன் மனைவியின் முன்னாள் காதலை எடுத்துக் கூறி தான் அவரை விவாகரத்து செய்ய விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

 

அதனைத் தொடர்ந்து திருமணமான அன்றே அப்புது மணத் தம்பதிகளுக்கு விவாகரத்து செய்து வைத்துள்ளார் அந்த மத போதகர். இது தொடர்பாக அந்த மதபோதகர் கூறுகையில், ‘இரவு என்னை சந்தித்த மணமகன் மிகவும் உணர்ச்சிகரமாக காணப்பட்டார்.

 

 

உண்மையிலேயே அவரவது வாழ்க்கையில் அவருக்கு அது அதிர்ச்சியாக இருந்தது. மனைவியை அவரது காதலனுடன் புகைபடத்தில் பார்த்ததை அவரால் தாங்கி கொள்ள முடியவில்லை’ எனத் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team