திருமலையில் பதற்றம்: முகமூடி அணிந்தோர் அட்டகாசம் - Sri Lanka Muslim

திருமலையில் பதற்றம்: முகமூடி அணிந்தோர் அட்டகாசம்

Contributors

திருகோணமலை பேருந்து நிலையத்திற்கு அருகில் பதற்றமான நிலையொன்று ஏற்பட்டுள்ளது. மனித உரிமைகள் தினமான இன்று காணாமல் போன தங்களுடைய உறவுகளை கண்டறியும் குழு இன்று கனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது திடீரென வந்த இனந்தெரியா கும்பலொன்று தாக்குதல் நடத்தியுள்ளது.இதனையடுத்து பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. முகமூடி அணிந்துவந்தவர்களே இவ்வாறு தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகத் தெரியவருகிறது.

சம்பவத்தில் காயமடைந்த காணாமல் போன உறவுகளை கண்டறியும் குழுவின் அமைப்பாளர் சுந்தரம் மகேந்திரன் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.(j.n)

missing-parents-trinco1missing-parents-trinco2missing-parents-trinco3missing-parents-trinco4

Web Design by Srilanka Muslims Web Team