திலினி பிரியமாலியின் காதலரை பார்க்க சிறைக்கு வந்த அரசியல்வாதி? - Sri Lanka Muslim

திலினி பிரியமாலியின் காதலரை பார்க்க சிறைக்கு வந்த அரசியல்வாதி?

Contributors

பல பில்லியன் நிதி மோசடி குற்றச்சாட்டில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியின் காதலன் எனக் கூறப்படும் இசுரு பண்டாரவை பார்வையிட அரசியல்வாதி ஒருவர் வந்துள்ளதாக கிடைத்த தகவல் தொடர்பில் சிறைச்சாலை திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

முன்னாள் அமைச்சர், அரசியல் கட்சியில் உயர் பதவியை வகிக்கும் இந்த எம்.பி. இசுரு பண்டாரவை சந்திக்க வந்ததாக சமூக வலைத்தளங்களில் ஒலி நாடா ஒன்று பரவியது.

ஒலி நாடா தொடர்பில் இசுரு பண்டாரவிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் ஒலி நாடா சிறைக்குள் நடந்த உரையாடல் அல்ல என்று இசுரு பண்டார தெரிவித்துள்ளார்.

 

Web Design by Srilanka Muslims Web Team