தீவிரவாதிகள் என்னை கொன்று விடுவார்கள்: மாலத்தீவு முன்னாள் அதிபர் அச்சம்! - Sri Lanka Muslim

தீவிரவாதிகள் என்னை கொன்று விடுவார்கள்: மாலத்தீவு முன்னாள் அதிபர் அச்சம்!

Contributors

மாலத்தீவு அதிபராக பதவி விகித்த முகம்மது நஷீத் கடந்த ஆண்டு பதவியை விட்டு வெளியேறி மாலேயில் உள்ள இந்திய தூதரகத்தில் தஞ்சமடைந்தார்.

கடந்த மாதம் 7ம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் 45 சதவீதம் வாக்குகளை பெற்று அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், அந்த தேர்தல் செல்லாது என்று அறிவித்த மாலத்தீவு உச்சநீதி மன்றம் மறு தேர்தலுக்கு உத்தரவிட்டது.  கடந்த 19ம் தேதி மறுதேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டும் கடைசி நிமிடம் வரை தேர்தலுக்கான ஏற்பாடுகளில் அரசு தீவிரம் காட்டாததால் மீண்டும் மறுதேர்தலுக்கான தேதி அடுத்த (நவம்பர்) மாதம் 9ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், அல்கொய்தா தீவிரவாதிகளால் தான் கொல்லப்படலாம் என முகம்மது நஷீத் அச்சம் தெரிவித்துள்ளார்.

முகம்மது நஷீத்-தை கொலை செய்வதற்காக அல் கொய்தா ஏஜண்ட்கள் மாலே நகரில் திட்டம் தீட்டி வருவதாக அவரது அலுவலகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team