துபாயில் 'ஏ.சி.' மேம்பாலங்கள் - Sri Lanka Muslim
Contributors

-துபாய்-

செல்வ செழிப்புமிக்க வளைகுடா நாடுகளில் ஒன்றான துபாய் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கேளிக்கை பூங்காக்கள், பல்லடுக்கு வணிக வளாகங்கள், ஆகியவற்றை உருவாக்கி உலகின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

 

சமீபத்தில் கோடிக்கணக்கான சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுத்த சர்வதேச வர்த்தக திருவிழாவை வெற்றிகரமாக நடத்தியுள்ள துபாய் அரசு விரைவில் துபாய் நகரின் வீதிகளில் அதிநவீன ‘டிராம்’ (ரெயில்களை போல் தண்டவாளத்தின் மீது சாலைகளின் குறுக்கேயும் ஓடும்) வாகனங்களை அறிமுகப்படுத்த உள்ளது.

 

முதல்கட்டமாக 11 நிலையங்களின் வழியாக 10.6 கிலோ மீட்டர் தூரம் வரை டிராம் பாதைகள் அமைக்கப்பட்டு, இதற்கான சோதன ஓட்டமும் வெற்றிகரமாக நடந்துள்ளது. துபாய் மெரினா மால் நிலையத்தில் இருந்து போலீஸ் பயிற்சி கழகம் வரையிலான இந்த வழித்தடத்தில் 11 டிராம்கள் இயக்கப்பட உள்ளது.

 

படிப்படியாக இந்த தூரத்தை 17 நிலையங்களை கடந்து 14.6 கிலோ மீட்டராக நீட்டிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

 

இதற்கிடையில், துபாய் மெரினா மால் நிலையத்தின் ஓரமாக பயணிகளின் வசதிக்காக புதிய மேம்பாலத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மேம்பாலம் முழுக்க, முழுக்க குளிர்சாதன வசதி கொண்டதாக அமைக்கப்படும்.

 

விரைவில் அனைத்து டிராம் நிலையங்களின் அருகிலும் குளிர்சாதன வசதி கொண்ட இத்தகைய மேம்பாலங்கள் உருவாக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

 

Web Design by Srilanka Muslims Web Team